2025ம் ஆண்டிற்குள் வேற்றுகிரக வாழ்க்கையின் அறிகுறிகள் கண்டுபிடிக்கப்படும்,என, நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.அவர்கள் மேலும் கூறியதாவது:அடுத்த, 10 ஆண்டுகளுக்குள், பூமிக்கு வெளியே வாழ்க்கை உள்ளதற்கு வலுவான அறிகுறிகள் கிடைக்கும். இதை உறுதிப்படுத்தும் ஆதாரங்களை, 20 – 30 ஆண்டுகளுக்குள், பெற்று விடுவோம்.வெகுவிரைவில், நமது சூரிய மண்டலத்திலும், அதற்கு அப்பால் உள்ள கிரகங்களிலும் வேறு ஒரு வாழ்க்கை உள்ளது கண்டுபிடிக்கப்படும்.நமது சூரிய மண்டலத்தில், சந்திரன் அல்லது செவ்வாய் கிரக வாழ்வியலை பொறுத்தவரை, நாம் ஒரு கால கட்டத்தில் இருந்து தள்ளி உள்ளோம்.
அதுபோல், வேறு ஒரு சூரிய மண்டலத்தை சுற்றியுள்ள கிரகத்தில் இருந்தும், நாம், ஒரு கால கட்ட அளவில் பின்தங்கிஉள்ளோம்.சூரிய மண்டலம் மற்றும் பால்வீதி நட்சத்திரக் கூட்டத்தின் சுற்றுச் சூழல், உயிரிகளுக்கு ஏற்றதாக உள்ளது என்பதை, அண்மைய கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன.ஜூபிடரின் யூரோப்பா மற்றும் கனிமிடி சந்திரன்களில், கடினமான பனிப் படிமங்களின் ஆழத்தில், கடல் நீர் இறுகிய நிலையில் காணப்படுவதை இதற்கு உதாரணமாக கூறலாம். அதுபோல், சனிக் கோளின், என்சிலாடஸ் சந்திரனிலும் உள்ளது.ஒருகாலத்தில், செவ்வாய் கிரகத்தின் பெரும்பகுதியை, கடல் சூழ்ந்திருந்தது. அவற்றில் இருந்த உப்பு தான், அக்கிரகத்தின் மேற்பரப்பில் இன்று காணப்படும் அடர்த்தியான கருமைக் கோடுகள் என, ஆய்வு கூறுகிறது.
0