பாகிஸ்தானில் தீவிரவாதிகளை கட்டுப்படுத்துவதற்காக சுமார் 100 கோடி டாலர் மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து பாக்.,கில் இருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்றிற்கு அமெரி்க்க அதிகாரிகள் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: பாகிஸ்தானி்ற்கு 100 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆயுதங்கள் விற்பனை செய்ய அமெரி்க்க ராணுவ பாதுகாப்பு கூட்டுறவு முகமை சான்றிதழ் அளித்துள்ளது. இதன்மூலம் பாகிஸ்தானில் தீவிரவாத தடுப்பு மற்றும் தீவிரவாத பதிலடி நடவடிக்கை மூலம் பாக்.,ராணுவத்தின் திறன் மேம்படும். என தெரிவித்தனர். இந்நிலையில் பாக்., ஆயுதங்கள் வாங்கி குவிப்பதை விட அந் நாட்டின் கல்வி, சுகாதாரம் ,வேலை வாய்ப்பு உருவாக்குவதற்கு செலவிடலாம் என அமெரிக்க பத்திரிகை ஒன்று தனது தலையங்கத்தில் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2