செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஆபிரகாம் லிங்கனின் இறுதி ஆசனம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறதுஆபிரகாம் லிங்கனின் இறுதி ஆசனம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது

ஆபிரகாம் லிங்கனின் இறுதி ஆசனம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறதுஆபிரகாம் லிங்கனின் இறுதி ஆசனம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது

0 minutes read

அமெரிக்காவில் முதன்முதலில் சுட்டுக்கொல்லப்பட்ட ஜனாதிபதியான ஆபிரகாம் லிங்கன், சுடப்பட்ட போது அமர்ந்திருந்த இருக்கையைத்தான் அருகில் உள்ள படத்தில் நீங்கள் பார்க்கிறீர்கள். மிக்சிகன் மாகாணத்தின் டியர்போன் பகுதியில் உள்ள ஹென்றி போர்டு அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் இந்த ஆசனம், லிங்கன் கொல்லப்பட்ட 150-வது ஆண்டு தினத்தையொட்டி நாளை (15-ந்தேதி) பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது.

அமெரிக்க உள்நாட்டு போர் 1865-ம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்தது. அந்த ஆண்டின் புனித வெள்ளியன்று (ஏப்ரல் 14) இரவில், வாஷிங்டனில் உள்ள தியேட்டர் ஒன்றில், ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் தனது மனைவியுடன் ‘அவர் அமெரிக்கன் கசின்’ என்ற நாடகம் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பிரபல நடிகரும், கான்பெடரேட் அமைப்பின் உளவாளியுமான ஜான் வில்கிஸ் பூத், லிங்கனை துப்பாக்கியால் சுட்டார். இதில் படுகாயமடைந்து கோமாவில் தள்ளப்பட்ட அவர், மறுநாள் காலையில் உயிரிழந்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.