ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா மாகாணத்திலுள்ள ஹோபார்ட் விமான நிலையத்தின் வலைதளத்தில் மர்ம நபர்கள் ஊடுருவி, ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவான வாசகங்களை பதிவு செய்தனர்.
இதையடுத்து அந்த வலைதளம் தாற்காலிகமாக முடக்கப்பட்டது.
இதுகுறித்து டாஸ்மேனியா போலீஸார் கூறியதாவது: ஹோபார்ட் விமான நிலைய வலைதளத்தில் சிலர் ஊடுருவி, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவான வாசகங்களைப் பதிவு செய்துள்ளனர். விமான நிலையத்துக்கு மிரட்டல் எதுவும் விடுக்கப்படவில்லை. இருந்தாலும், விமான நிலையத்தில் கண்காணிப்பை அதிகரித்துள்ளோம்.
வலைதளத்தில் ஊடுருவியவர்கள், தாங்கள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற விவரத்தைத் தெரிவிக்கவில்லை என்றனர் டாஸ்மேனியா போலீஸார்.