செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் “ஸ்மார்ட் போனில்” தீவிரமாக விளையாடி தசை நார் கிழிந்தது“ஸ்மார்ட் போனில்” தீவிரமாக விளையாடி தசை நார் கிழிந்தது

“ஸ்மார்ட் போனில்” தீவிரமாக விளையாடி தசை நார் கிழிந்தது“ஸ்மார்ட் போனில்” தீவிரமாக விளையாடி தசை நார் கிழிந்தது

1 minutes read

நவீன செல்லிடப் பேசிகளான “ஸ்மார்ட் போன்’களில் நேரம் போவது தெரியாமல் விளையாடுவது இன்றைய இளைஞர்களின் அடையாளமாகி வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சேர்ந்த 29 வயது இளைஞர் ஒருவர் “கேண்டி கிரஷ்’ என்ற புகழ்பெற்ற விடியோ விளையாட்டை தீவிரமாக விளையாடி, தனது கட்டை விரல் தசை நாரைக் கிழித்துக் கொண்ட தகவல் அந்த நாட்டின் “லைவ் சயின்ஸ்’ அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

பொதுவாக, அந்தத் தசை நார் கிழிந்து போனவர்கள் வலியில் துடித்துப் போவார்களாம்.

ஆனால் அந்த இளைஞர் தசை நார் கிழந்தது குறித்து எதுவுமே தெரியாமல் “மெய் மறந்து’விளையாடிக் கொண்டிருந்ததுதான் மிகவும் விநோதம் என அந்த மருத்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையை எழுதியவர்களின் ஒருவரான மருத்துவர் ஆண்ட்ரூ டோன் இதுகுறித்து கூறியதாவது:

தனது கட்டை விரலில் அடி பட்டிருப்பதாகவும், தன்னால் விரலை அசைக்க முடியவில்லை எனவும் கூறி ஒரு இளைஞர் மருத்துவரிடம் சென்றுள்ளார்.

அவரது விரலைப் பரிசோதித்த மருத்துவர்கள், கட்டை விரலை எலும்புடன் இணைக்கும் தசை நார்கள் கிழிந்திருப்பதைக் கண்டறிந்தனர்.

அதற்குக் காரணம் “ஸ்மார்ட் போனில்’ அவர் தொடர்ந்து “கேண்டி கிரஷ்’ விளையாடி வந்ததுதான் என்பதையும் கண்டறிந்தனர்.

பொதுவாக, விரல் தசை நார்களின் மெல்லிய பாகமோ, அல்லது எலும்புடன் இணையும் பகுதியோதான் கிழிவது வழக்கம்.

ஆனால் அந்த இளைஞருக்கு, தசை நாரின் தடித்த பகுதியே கிழிந்து போயிருந்தது.

அப்படிக் கிழிந்திருந்ததால் அவருக்கு மிக அதிகமான வலி ஏற்பட்டிருக்கும்.

ஆனால், அந்த இளைஞருக்கு பாதிக்கப்பட்ட விரலைக் கொண்டு விளையாடும்போது வலி தெரியவில்லை. விடியோ விளையாட்டுகள் செயற்கையான வலி நிவாரணிகளாகச் செயல்படலாம் என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.

இவ்வாறு விடியோ விளையாட்டுகள் வலியை மறக்கச் செய்வது ஆபத்தில் முடியலாம்.

விடியோ விளையாட்டால் விரல் பாதிக்கப்பட்ட அந்த இளைஞருக்கு இறுதியில் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது என்றார் மருத்துவர் ஆண்ட்ரூ டோன்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.