பாகிஸ்தான் கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூலை – ஆகஸ்ட் மாதங்களில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடத் தயாராகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடவிருப்பதாகவும் அறியக்கிடைக்கின்றது.
இரு நாட்டு கிரிக்கெட் சபைகளும் ஆலோசனை நடத்திய பின்னர் போட்டிகள் நடைபெறும் திகதிகள் மற்றும் மைதானங்களை இறுதிசெய்யப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு முன்னர் பாகிஸ்தான் அணி ஜூன் மாதம் மேற்கிந்திய தீவுகள் சென்று அங்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.