செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வன்முறைக் குழுவைச் சேர்ந்த ஐவர் கைது! – வாள்களும் மீட்பு

வன்முறைக் குழுவைச் சேர்ந்த ஐவர் கைது! – வாள்களும் மீட்பு

1 minutes read

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 5 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து இரண்டு வாள்கள் மற்றும் களவாடப்பட்ட 3 மோட்டார் சைக்கிள்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன என்று யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடம் ஒக்ரோபர் மாதம் காரைநகர் பகுதியிலுள்ள வீடொன்றில் இரண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற 6 பேர் கொண்ட குழு வீடொன்றைச் சேதப்படுத்தி தீவைத்துக் கொளுத்தி, ஒன்றரைக் கோடி பெறுமதியான சொத்துக்களைச் சேதப்படுத்தியிருந்தது. இது தொடர்பில் பொலிஸராரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதேபோல் நாவற்குழி பகுதியிலுள்ள எரிபொருள் நிலையம் ஒன்றின் மீது தாக்குதல்கள் மேற்கொண்ட சம்பவம் தொடர்பிலும் பொலிஸரினால் நீண்டகாலமாகத் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்களை யாழ்.மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி பொ.மேனன் தலைமையில், உபபொலிஸ் பரிசோதகர் பிரதீப் குழுவினர் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் வன்முறைச் சம்பவங்களுக்கு பயன்படுத்துவதற்கென யாழ்ப்பாணம் கச்சேரிப் பகுதியில் மோட்டார் சைக்கிளைத் திருடி போலி இலக்கத்தகடுகளை மாற்றிப் பயன்படுத்தியமை தெரியவந்ததுள்ளது.

மேலும் சில போலி இலக்கத்தகடுகளும் வன்முறைச்சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களும் இரண்டு வாள்களும் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் நவாலி, மானிப்பாய், காரைநகர், விசுவமடு பகுதிகளைச் சேர்ந்த 24 தொடக்கம் 26 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர். மேலும் 3 சந்தேகநபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.