செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஆஸிக்குள் நுழைய முயன்ற 41 இலங்கையர்கள் நாடு கடத்தல்!

ஆஸிக்குள் நுழைய முயன்ற 41 இலங்கையர்கள் நாடு கடத்தல்!

0 minutes read

சட்டவிரோதமான முறையில் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்பட்ட 41 இலங்கையர்கள் இன்று காலை விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

குறித்த 41 இலங்கையர்களும் அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு கிறிஸ்மஸ் தீவில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், அந்நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு இன்று காலை அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தமான ஏ.எஸ்.வை. – 013 என்ற விமானத்தில் ஆஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவிலிருந்து தமது பயணத்தை ஆரம்பித்த இவர்கள், இன்று காலை 9.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவர்களில் பெரும்பாலானோர் யாழ்ப்பாணம் மற்றும் வாழைச்சேனை பிரதேசங்களில் வசிப்பவர்கள் எனவும், இவர்கள் பல நாள் மீன்பிடிப் படகுகள் மூலம் கடல் கடந்து ஆஸ்திரேலியா சென்றுள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.