செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மரணம்!

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மரணம்!

0 minutes read

வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பரிதாபகரமாகச் சாவடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் கொழும்பு – குருநாகல் பிரதான வீதியின் வரக்காப்பொலை – துல்ஹிரிய பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

ஓட்டோ ஒன்றும் டிப்பர் ஒன்றும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் ஓட்டோவில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை (வயது 40), தாய் (வயது 39) மற்றும் மகன் (வயது 13) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.