October 2, 2023 1:41 pm

13 முழுமை பெற இடமளியோம்! – காமினி லொக்குகே திட்டவட்டம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

“அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுலாக்குவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உடன்படாது. இந்த விடயத்தில் உறுதியான கொள்கையில்தான் எமது கட்சி உள்ளது.”

– இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“13 தொடர்பில் இரட்டை நிலைப்பாட்டில் நாம் இல்லை. ஒரேயொரு நிலைப்பாட்டில்தான் நாம் இருக்கின்றோம். அதாவது 13 ஐ வழங்குவதற்கு எமது கட்சி உடன்படாது. இந்த விடயத்தில் எமது கட்சியின் கொள்கை மாறாது.

இது சம்பந்தமாக ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தவும் தயாராகவுள்ளோம். யோசனைகளும் முன்வைக்கப்படும்.” – என்றார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்