இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி, இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது.
உள்ளூர் நேரப்படி இரவு 7 மணிக்கு ஆண்டிகுவா மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள இப்போட்டியில், இலங்கை அணிக்கு திமுத் கருணாரத்னவும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு கிய்ரன் பொலார்ட்டும் தலைமை தாங்கவுள்ளனர்.
முன்னதாக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின், முதலாவது ஓருநாள் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்தது.
இந்த நிலையில், இன்றைய போட்டியில் கட்டாய வெற்றியை நோக்கி இலங்கை அணி களமிறங்கவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெற்றால் மாத்திரமே தொடரை தக்கவைக்க முடியும்.
அதேவேளை இப்போட்டியில் வெற்றிபெற்றால் தொடரை தன்வசப்படுத்த முடியும் என்ற நோக்கத்திற்காக மேற்கிந்திய தீவுகளும் கடுமையாக போராடும்.
எதுஎவ்வாறாயினும் இப்போட்டியின் வெற்றி, தோல்வி இரசிகர்களை குதுகலப்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இப்போட்டியின் முடிவினை எதிர்பார்த்துக் காத்திருப்போம்.