Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு ஜோகோவிச்சை வீழ்த்தி முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் மெட்வெடேவ்

ஜோகோவிச்சை வீழ்த்தி முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் மெட்வெடேவ்

1 minutes read

அமெரிக்க ஓபனில் ஆடவர்க்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி, டேனியல் மெட்வெடேவ் சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

Daniil Medvedev of Russia celebrates with the championship trophy after defeating Novak Djokovic to win the Men's Singles final match on Day Fourteen of the 2021 US Open.

ஞாயிற்றுக்கிழமை நியூயோர்க்கின் ஆர்தர் ஆஷே அரங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-4, 6-4, 6-4 என்ற நேர் செட்களில் உலக நம்பர் 1 வீரர் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி, உலகின் நம்பர் 2 வீரரா டேனியல் மெட்வெடேவ் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.

இந்த வெற்றியின் மூலம் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற மூன்றாவது ரஷ்ய வீரர் என்ற பெருமையையும் 25 வயதான மெட்வெடேவ் பெற்றார்.

இதேவேளை உலக நம்பர் 1 வீரரான ஜோகோவிச் ஏற்கனவே இந்த ஆண்டு அவுஸ்திரேலிய ஓபன், பிரஞ்சு ஓபன் மற்றும் விம்பிள்டன் பட்டங்களை வென்றிருந்தார்.

34 வயதான செர்பிய வீரர் ஜோகோவிச்  21 ஆவது கிராண்ட்ஸ்லாம் ஆண்கள் பட்டத்தையும் இதுவரை வென்றுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More