Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு இலங்கை ‘ஏ’ கிரிக்கெட் அணியின் பயிற்றுநராக ருமேஷ் ரத்நாயக்க நியமனம்

இலங்கை ‘ஏ’ கிரிக்கெட் அணியின் பயிற்றுநராக ருமேஷ் ரத்நாயக்க நியமனம்

1 minutes read

இலங்கை  ‘ஏ’ கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநராக இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ருமேஷ் ரத்நாயக்க  நியமிக்கப்பட்டுள்ளார். 

இம்மாதம் இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான்  ‘ஏ’ கிரிக்கெட் அணிக்கெதிரான தொடரில் பங்கேற்கவுள்ள  இலங்கை  ‘ஏ’ கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்றுநராக ருமேஷ் ரத்நாயக்க செயற்படவுள்ளார்.

இவர், இதற்கு முன்னரும் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுநர் மற்றும் வேகப்பந்துவீச்சு பயிற்றுநர் போன்ற பல்வேறு பொறுப்புக்க‍ளை வகித்துள்ளார்.

தலைமை பயிற்றுநர் ருமேஷ் ரத்நாயக்கவுக்கு பக்கபலமாக, துடுப்பாட்ட பயிற்றுநராக ருவின் பீரிஸையும், பந்துவீச்சு பயிற்றுநராக தர்ஷன கமகேவையும், சுழற்பந்துவீச்சு பயிற்றுநராக சஜீவ வீரகோனையும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் நியமித்துள்ளது.

பாகிஸ்தான்  ‘ஏ’ கிரிக்கெட் அணிக்கெதிராக  இலங்கை ‘ஏ’ கிரிக்கெட் அணி 4 நாட்கள் கொண்ட 2 உத்தியோகபற்றற்ற டெஸ்ட் போட்டிகளிலும்,  உத்தியோகற்றற்ற 3 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடவுள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More