இலங்கை மகளிர் அணி ஒக்டோபரில் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளாது!

பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றத்தைத் தொடர்ந்து இந்த மாத இறுதியில் பாகிஸ்தானுக்கான இலங்கை மகளிர் அணியின் சுற்றுப் பயணமானது முட்டுக்கட்டையாகிவிட்டன.

இதன் விளைவாக இந்த தொடர் முன்னதாக திட்டமிட்டபடி ஒக்டோபரில் நடக்காது.

Story Image

ஆனால் 2022 ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கு முன்பாக இரு நாட்டு கிரிக்கெட் நிர்வாகங்களும் போட்டியை நடத்துவதற்கா திகதியை தீர்மானிக்கும்.

இந்த வார தொடக்கத்தில் இலங்கை மகளிர் அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் திட்டமிட்டபடி முன்னோக்கி செல்லும் என்ற நம்பிக்கை இருந்தது.

எனினும் தற்போது வாரியம் மேற்கொள்ளும் நிர்வாக மாற்றங்களைக் கருத்தில் கொண்டு போட்டிகளை ஏற்பாடு செய்வது கடினமாக இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சுட்டிக்காட்டியுள்ளன.

ஆசிரியர்