Tuesday, December 7, 2021

இதையும் படிங்க

3 ஆவது இளையோர் சர்வதேச ஒருநாள் போட்டியில் இலங்கை வெற்றி

கொழும்பு எஸ்.எஸ்.சீ. மைதானத்தில்  நேற்றைய தினம் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதிக்கொண்ட  மூன்றாவது இளையோர் சர்வதேச ஒருநாள் ‍போட்டியில் இலங்கை அணி 2...

இரண்டாவது லங்கா பிரீமியர் லீக் –வெற்றி பெற்றது Galle Gladiators!

இரண்டாவது லங்கா பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியில் Galle Gladiators அணி 54 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்த...

நியூஸிலாந்தை வீழ்த்தி இந்தியா சாதனை வெற்றி

இரண்டாவது டெஸ்டின் நான்காம் நாள் ஆட்டத்தில் விராட் கோஹ்லியின் இந்திய அணி 372 ஓட்டங்களினால் நியூஸிலாந்தை வீழ்த்தி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி அஜாஸ் படேல் சாதனை

இந்தியாவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நேற்றைய தினம் நியூஸிலாந்து அணி வீரர் அஜாஸ் படேல் வரலாற்று சாதனை படைத்துள்ளார். இடது...

லங்கா பிரீமியர் லீக்கின் இரண்டாவது பருவகால தொடர் இன்று ஆரம்பம்!

லங்கா பிரீமியர் லீக்கின் தொடரின் இரண்டாவது பருவகாலதிற்கான முதல் போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ளது. 5 அணிகளின் பங்குபற்றுதலுடன் இடம்பெறும் இந்த தொடர்...

உலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் | பி.வி.சிந்து இறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம்

அரையிறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சி, சிந்துவிடம் தோல்வி அடைந்தார். இந்தோனேசியாவின் பாலி நகரில் உலக டூர்...

ஆசிரியர்

20-20 உலகக் கிண்ணம் | ஆப்கானிஸ்தான் – ஸ்கொட்லாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐக்கிய அரபு இராச்சியத்தில் தற்போது நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் இருபதுக்கு 20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்றில் 2 ஆம் குழுவில் இடம்பெறும் ஆப்கானிஸ்தான், ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி ஷார்ஜாவில் இன்று இரவு நடைபெறவுள்ளது.

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் இரண்டு அணிகளும் ஒரு தசாப்தத்துக்கு முன்னர் விளையாட ஆரம்பித்த போதிலும் அவை தகுதிகாண் சுற்றுகள் மூலம் நீண்ட தூரம் பயணித்தே பிரதான சுற்றில் விளையாடி வந்துள்ளன.

இம் முறை சுப்பர் 12 சுற்றுக்கு ஆப்கானிஸ்தான் நேரடியாக தகுதிபெற்ற அதேவேளை, ஸ்கொட்லாந்து பிராந்திய மற்றும் முதலாம் சுற்றுகளில் விளையாடி சிறந்த பேறுபேறுகளுடன் தகுதிபெற்றுக்கொண்டது.

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் ஸ்கொட்லாந்து 2007 இலும் ஆப்கானிஸ்தான் 2010 இலும் முதல் தடவையாக விளையாடியிருந்தன. 

உலகக் கிண்ணத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய போட்டிகளில் இரண்டு அணிகளும் விளையாடியுள்ளபோதிலும் சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட்டில் 70 க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடியுள்ளன.

இந்த இரண்டு அணிகளினதும் அண்மைக்கால பெறுபேறுகளின் பிரகாரம் ஆப்கானிஸ்தான் வெற்றிபெறுவதற்கு அனுகூலமான அணியாகத் தென்படுகின்றது. 

ஆனால், எத்தகைய சவாலையும் முறியடிக்கக்கூடிய அணி என்பதை பங்களாதேஷுடனான முதல் சுற்று வெற்றிமூலம் ஸ்கொட்லாந்து நிரூபித்துள்ளது.

சுப்பர் 12 சுற்றுக்கு முன்னர் ஆப்கானிஸ்தான் 2 பயிற்சிப் போட்டிகளில் விளையாடிய போதிலும் சொந்த நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக அவ்வணி வீரர்களால் நிம்மதியாக தங்களைத் தயார்படுத்திக்கொள்ள முடியாமல் போனது. 

சில வீரர்கள் தி ஹண்ட்ரட், ஐபிஎல் போட்டிகளில் விளையாடி அனுபவம் பெற்றபோதிலும் ஏனையவர்கள் போட்டிகளின்றி வெறுமனே பயிற்சிகளில் மாத்திரம் ஈடுபட்டுவந்தனர்.

எவ்வாறாயினும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் ஈட்டிய வெற்றி ஆப்கானிஸ்தானுக்கு நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.

மேலும் அதன் ஆரம்ப வீரர்களான ஹஸ்ரத்துல்லாஹ் ஸஸாய், மொஹம்மத் ஷாஸாத் ஆகிய இருவரும் திறமையை வெளிப்படுத்தி சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்ததைப் போன்று இன்றைய போட்டியிலும் பிரகாசிப்பார்கள் எனவும் அஸ்கர் அப்கான் தனது அனுபவத்தின் மூலம் சிறந்த பங்களிப்பை வழங்குவார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அனுபவசாலியான மொஹம்மத் நபியின் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியில் ராஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக் ஆகியோர் பந்துவீச்சில் சாதிப்பர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஸ்கொட்லாந்து எந்தவொரு தனிப்பட்ட வீரர்களிலும் தங்கியிருக்கவில்லை. நடந்து முடிந்த போட்டிகளில் வெவ்வேறு வீரர்களினது ஆற்றல்களுடனேயே ஸ்கொட்லாந்து வெற்றிபெற்று வந்துள்ளது.

அணித் தலைவர் கய்ல் கோட்ஸர், 31 வயதான ஜொஷ் டாவி, ப்றட் வீல், மார்க் வொட், ரிச்சி பெரிங்டன், ஜோர்ஜ் மன்சே ஆகியோர் தமது அணியின் வெற்றிக்காக ஆக்ரோஷத்துடன் விளையாடுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் இந்த 2 அணிகளும் சந்தித்த 6 சந்தர்ப்பங்களிலும் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றுள்ளது. இரண்டு அணிகளும் 2016 க்குப் பின்னர் இன்றைய தினமே ஒன்றையொன்று எதிர்த்தாடவுள்ளன.

அணிகள்

ஆப்கானிஸ்தான்: ஹஸ்ரத்துல்லா ஸஸாய், மொஹம்மத் ஷாஸாத், ரஹ்மானுல்லா குர்பாஸ், நஜிபுல்லா ஸத்ரான், அஸ்கர் அப்கான், மொஹம்மத் நபி (தலைவர்), கரிம் ஜனத், கல்பாதின் நய்ப், ராஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக்.

ஸ்கொட்லாந்து: ஜோர்ஜ் மன்சே, கய்ல் கோட்ஸர் (தலைவர்), மெத்யூ க்ரொஸ், ரிச்சி பெரிங்டன், கெலம் மெக்லியொட், மைக்கல் லீஸ்க், கிறிஸ் க்றீவ்ஸ், மார்க் வொட், ஜொஷ் டாவி, சபியான் ஷெரிப், ப்றட் வீல். 

(என்.வீ.ஏ.)

இதையும் படிங்க

தம்புள்ளையை 8 விக்கெட்டுகளினால் வீழ்த்திய ஜப்னா கிங்ஸ்

லங்கா பிரீமியர் லீக் தொடரில் இன்று பிற்பகல் நடைபெற்ற தம்புள்ளை ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜப்னா கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.

லங்கா பிரீமியர் லீக் தொடரிலிருந்து பினுர பெர்னாண்டோ நீக்கம்

கண்டி வோரியர்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர் பினுர பெர்னாண்டோ 2021 லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

காலி கிளாடியேட்டர்ஸை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்திய கொழும்பு ஸ்டார்ஸ்

லங்கா பிரீமியர் லீக் டி-20 கிரக்கெட் தொடரில் நேற்றிரவு நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்தில் காலி கிளாடியேட்டர்ஸ்க்கு எதிரான போட்டியில் கொழும்பு ஸ்டார்ஸ் அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. 

கண்டி வோரியர்ஸை 20 ஓட்டங்களினால் வீழ்த்தியது தம்புள்ளை ஜெயன்ட்ஸ்

2021 லங்கா பிரீமியர் லீக் டி-20 தொடரில் கண்டி வோரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தம்புள்ளை ஜெயன்ட்ஸ் அணி 20 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. லங்கா...

லங்கா பிரீமியர் லீக்: கொழும்பு ஸ்டார்ஸ் அணி வெற்றி!

லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் மூன்றாவது லீக் போட்டியில், கொழும்பு ஸ்டார்ஸ் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நேற்று...

அரிதான புகைப்படத்தை வெளியிட்ட பிசிசிஐ

அக்சர் படேல், அஜாஸ் படேல், ரச்சின் ரவீந்திரன் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சரியான ஒத்திசைவுடன் நிற்கும் நம்பமுடியாத புகைப்படத்தை பி.சி.சி.ஐ.வெளியிட்டுள்ளது.

தொடர்புச் செய்திகள்

பூண்டு தரும் ஆச்சரியமான அழகு ரகசியங்கள்

பூண்டு பல மருத்துவ குணங்களையும், ஆச்சரியமான அழகு ரகசியங்களையும் கொண்டிருக்கிறது. பூண்டின் ஐந்து அழகு நன்மைகள் குறித்து பார்ப்போம்.

குழந்தைகள் பிஸ்கெட் சாப்பிடுவதால் வரும் பிரச்சனைகள்

குழந்தைக்கு நான்கு மாதம் முடிந்துவிட்டால், தாய்பால் போதவில்லை என பல தாய்மார்கள் இணை உணவாக பிஸ்கெட்டை கொடுக்கிறார்கள். தெரிந்தே தங்கள் பிள்ளைகளுக்கு நஞ்சை...

அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலை எதிர்த்து வழக்கு!

மீனம்பாக்கம்: நீதிமன்றத்தின் தீர்ப்பை எப்போதுமே மதிப்பவன் நான் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதை...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

பாடசாலை மாணவர்களுக்கு வீதி விழிப்புணர்வு கருத்தரங்கு

பாடசாலை மாணவர்களுக்கான வீதிப்பாதுகாப்பு 02வது கருத்தரங்கு நிகழ்வு கிளி புனித திரேசா பாடசாலையில் இன்று நடைபெற்றது. வீதி...

இந்தியாவில் விருதினை வென்ற ஜெனோசனின் ‘நிலம்’ ஈழக் குறும்படம்

ஈழத்தமிழத் தேசத்தில் 'எமது நிலம் எமக்கு வேண்டும்' என நில அபகரிப்புக்கு எதிரான குரல்கள் தொடர்ச்சியாக ஒலித்து வரும் நிலையில், அபகரிப்புக்குள்ளான சொந்த நிலத்தின் ஏக்கத்தை பேசுபொருளாக கொண்ட 'நிலம்'...

லங்கா பிரீமியர் லீக் தொடரிலிருந்து பினுர பெர்னாண்டோ நீக்கம்

கண்டி வோரியர்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர் பினுர பெர்னாண்டோ 2021 லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மேலும் பதிவுகள்

நியூஸிலாந்தை வீழ்த்தி இந்தியா சாதனை வெற்றி

இரண்டாவது டெஸ்டின் நான்காம் நாள் ஆட்டத்தில் விராட் கோஹ்லியின் இந்திய அணி 372 ஓட்டங்களினால் நியூஸிலாந்தை வீழ்த்தி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

நூலமாக மாறிய முடி திருத்தகம் | பாண்டியன் சுந்தரம்

முடி திருத்தகத்தில் ஒரு நூலகம்! வருகிறவர் ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து பத்து பக்கங்களுக்கு மேல் வாசித்தால் அவருக்கு ரூபாய் 30 தள்ளுபடி தந்து, அசத்துகிறார் முடிதிருத்தும் கலைஞர் பொன்...

3 ஆவது இளையோர் சர்வதேச ஒருநாள் போட்டியில் இலங்கை வெற்றி

கொழும்பு எஸ்.எஸ்.சீ. மைதானத்தில்  நேற்றைய தினம் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதிக்கொண்ட  மூன்றாவது இளையோர் சர்வதேச ஒருநாள் ‍போட்டியில் இலங்கை அணி 2...

அபுதாபி டி – 10 | இன்று இறுதிப் போட்டி

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி நகரில் நடைபெற்று வரும் அபுதாபி டி10 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில்  வனிந்து ஹசரங்க அங்கம் வகிக்கும் வஹாப் ரியாஸ் தலைமையிலான டெக்கன் கிளேடியேட்டர்ஸ்...

ஒமிக்ரோன் பரவலை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது

கொவிட்-19 இன் ஆபத்தான ஒமிக்ரோன் மாறுபாட்டின் பரவலைக் கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா...

மக்களின் எதிர்பார்ப்பு தவிடுபொடியாகியுள்ளது | திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிப்பு

"நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கருத்து வெளியிடும் சுதந்திரம் இருக்கின்றது. எனவே, அதற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான செயற்பாடுகள் இடம்பெறுவது கண்டிக்கத்தக்கது. இவ்வாறான நடவடிக்கைகள் ஜனநாயக...

பிந்திய செய்திகள்

பூண்டு தரும் ஆச்சரியமான அழகு ரகசியங்கள்

பூண்டு பல மருத்துவ குணங்களையும், ஆச்சரியமான அழகு ரகசியங்களையும் கொண்டிருக்கிறது. பூண்டின் ஐந்து அழகு நன்மைகள் குறித்து பார்ப்போம்.

குழந்தைகள் பிஸ்கெட் சாப்பிடுவதால் வரும் பிரச்சனைகள்

குழந்தைக்கு நான்கு மாதம் முடிந்துவிட்டால், தாய்பால் போதவில்லை என பல தாய்மார்கள் இணை உணவாக பிஸ்கெட்டை கொடுக்கிறார்கள். தெரிந்தே தங்கள் பிள்ளைகளுக்கு நஞ்சை...

அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலை எதிர்த்து வழக்கு!

மீனம்பாக்கம்: நீதிமன்றத்தின் தீர்ப்பை எப்போதுமே மதிப்பவன் நான் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதை...

தம்புள்ளையை 8 விக்கெட்டுகளினால் வீழ்த்திய ஜப்னா கிங்ஸ்

லங்கா பிரீமியர் லீக் தொடரில் இன்று பிற்பகல் நடைபெற்ற தம்புள்ளை ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜப்னா கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.

மதத்தின் பெயரால் வன்முறையில் ஈடுபடுபடுவோரை பாகிஸ்தான் விட்டுவைக்காது – இம்ரான் கான் சபதம்

இஸ்லாம் அல்லது நபி (ஸல்) அவர்களின் பெயரால் வன்முறையில் ஈடுபடுபவர்களை அரசாங்கம் விட்டுவைக்காது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் செவ்வாயன்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஈழக்காண்பி ‘Eelamplay’ | ஈழத் திரைப்படங்களை வெளியிட அறிமுகமாகும் ஓடிடி தளம்

ஈழக்காண்பி (Eelamplay) என்பது ஓர் உறுப்புக்கட்டணத் திரையோடைத் தளமாகவும் (streaming platform) ஒரு திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகவும் விளங்குகிறது.Eelamplay is a subscription-based...

துயர் பகிர்வு