செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு ரி-20 உலகக்கிண்ணம்: மாலிக்கின் அதிரடியால் ஸ்கொட்லாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான் அணி!

ரி-20 உலகக்கிண்ணம்: மாலிக்கின் அதிரடியால் ஸ்கொட்லாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான் அணி!

1 minutes read

ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் 41ஆவது லீக் போட்டியில், பாகிஸ்தான் அணி 72 ஓட்டங்களால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.

சார்ஜாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குழு 2இல் நடைபெற்ற இப்போட்டியில், பாகிஸ்தான் அணியும் ஸ்கொட்லாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பாபர் அசாம் 66 ஓட்டங்களையும் சொயிப் மாலிக் 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ஸ்கொட்லாந்து அணியின் பந்துவீச்சில், கிறிஸ் க்ரேவ்ஸ் 2 விக்கெட்டுகளையும் ஹம்சா தாயீர் மற்றும் சப்யான் செரீப் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 190 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு ஸ்கொட்லாந்து அணியால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 117 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, ரிச்சி பெரிங்டன் ஆட்டமிழக்காது 54 ஓட்டங்களையும் ஜோர்ஜ் முன்சே 17 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில், சதாப் கான் 2 விக்கெட்டுகளையும் ஷாயின் ஷா அப்ரிடி, ஹரிஸ் ரவூப் மற்றும் ஹசன் அலி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 18 பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் 1 பவுண்ரி அடங்களாக ஆட்டமிழக்காது 54 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட சொயிப் மாலிக் தெரிசெய்யப்பட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.