Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு ஆஷஸ்: முதல் போட்டிக்கான அவுஸ்ரேலிய அணி விபரம் அறிவிப்பு!

ஆஷஸ்: முதல் போட்டிக்கான அவுஸ்ரேலிய அணி விபரம் அறிவிப்பு!

1 minutes read

கிரிக்கெட் உலகின் போர் என வர்ணிக்கப்படும், ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டிக்கான அவுஸ்ரேலிய அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் ஊழலை அடுத்து அணித்தலைவர் பதவியில் இருந்து விலகிய டிம் பெய்னுக்கு பதிலாக அலெக்ஸ் கேரி டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் பெறுகிறார். இவர் டேவிட் வோர்னருடன் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கவுள்ளார்.

பெட் கம்மின்ஸ் டெஸ்ட் அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்டீவ் ஸ்மித் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சரி தற்போது அணியின் முழுமையான விபரத்தை பார்க்கலாம்…

பெட் கம்மின்ஸ் தலைமையிலான அணியில், அலெக்ஸ் கேரி, கெமரூன் கீரின், மார்கஸ் ஹரிஸ், ஜோஸ் ஹசில்வுட், ட்ராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஸ்சேகன், நாதன் லியோன், மைக்கேல் நீஸர், ஜெய் ரீச்சட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டாக், மிட்செல் ஸ்வெப்சன், டேவிட் வோர்னர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இரு அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 8ஆம் திகதி பிரிஸ்பேனில் நடைபெறவுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More