செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு ரி-10: டெல்லி புல்ஸ் அணி சிறப்பான வெற்றி!

ரி-10: டெல்லி புல்ஸ் அணி சிறப்பான வெற்றி!

1 minutes read

ரி-10 தொடரின் 30ஆவது லீக் போட்டியில், டெல்லி புல்ஸ் அணி 49 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

அபுதாபியில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், டெல்லி புல்ஸ் அணியும் அபுதாபி அணியும் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்;சியில் வெற்றிபெற்ற அபுதாபி அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி புல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, குர்பாஸ் 69 ஓட்டங்களையும் செர்பேன் ருத்தர்போர்ட் 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அபுதாபி அணியின் பந்துவீச்சில், கொட்ரேல், லிவிங்ஸ்டோன் மற்றும் நவீன் உல் ஹக் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 136 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அபுதாபி அணியால், நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 86 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், டெல்லி புல்ஸ் அணி 49 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, லியாம் லிவிங்ஸ்டோன் 29 ஓட்டங்களையும் பிலிப் சோல்ட் 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

டெல்லி புல்ஸ் அணியின் பந்துவீச்சில், அடில் ராஷித் மற்றும் டோமினிக் ட்ரேக்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் சந்தரபோல் எம்ராஜ் மற்றும் ஷிராஸ் அஹமட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 29 பந்துகளில் 6 சிக்ஸர்கள் 5 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 69 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ரஹமனுல்லா குர்பாஸ் தெரிவுசெய்யப்பட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.