March 26, 2023 11:48 pm

FIFA 2022 | கத்தாரில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

FIFA 2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டி வருகிற 21-ம் தேதி தொடங்கி 28 நாட்கள் வரை நடைபெறும். இதன் இறுதிப்போட்டி டிசம்பர் 18-ம் தேதி நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக கடந்த 4 வருடங்களாக 210 அணிகள் முயற்சி செய்து வருகின்றனர்.

ஆனால் போட்டியில் 32 அணிகள் மட்டுமே பங்கேற்கும். அதன்படி இப்போட்டியில், அமெரிக்கா, மெக்ஸிகோ, கன்னடா, கேமரூன், மொரோக்கோ, துனிசியா, செனகள், கானா, உருகுவே, ஈக்வடார், அர்ஜென்டினா, பிரேசில், போர்ச்சுக்கல், போலந்து, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, இங்கிலாந்து, செர்பியா, ஸ்பெயின், குரோசியா, பெல்ஜியம், பிரான்ஸ், டென்மார்க், ஜெர்மனி, ஜப்பான், சவுதி அரேபியா, தென்கொரியா, ஈரான், கத்தார், வேல்ஸ், கோஸ்டா ரிகா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கும்.

இதனையடுத்து 32 அணிகளும், 4 அணிகள் கொண்ட 8 குழுக்களாக பிரிக்கப்படும். அதன்படி குழு ஏ பிரிவில் நெதர்லாந்து, செனகல், ஈக்வடார், கத்தார் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளது.

அதன் பிறகு குழு பி பிரிவில் இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ் ஆகிய நாடுகளும், குழு சி பிரிவில் போலந்து, மெக்ஸிகோ, அர்ஜென்டினா, சவுதி அரேபியா ஆகிய நாடுகளும், குழு பிரிவில் துனிசியா, டென்மார்க், ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளும், குழு இ பிரிவில் ஜப்பான், ஜெர்மனி, கோஸ்டா ரிகா, ஸ்பெயின் ஆகிய நாடுகளும், குழு எஃப் பிரிவில் பெல்ஜியம், கனடா, மொரக்கோ, குரோயேஷியா ஆகிய நாடுகளும், குழு ஜி பிரிவில் கேமரூன், சுவிட்சர்லாந்து, பிரேசில், செர்பியா ஆகிய நாடுகளும், குழு எச் பிரிவில் கொரிய குடியரசு, உருகுவே, கானா மற்றும் போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளது. மேலும் 12 நாட்கள் நடைபெறும் குழு சுற்றுப் போட்டிகளின் போது, 1 நாளைக்கு 4 போட்டிகள் நடைபெறும். அதோடு ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடத்தை பிடிக்கும் அணிகள், கடைசி 16 அணிகள் மோதும் இதில் இறுதி கட்டத்திற்கு முன்னேறும்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்