இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியிலும் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.
கார்டிஃப் நகரில் வியாழகை்கிழமை (17) நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 145 ஓட்டங்களைப் பெற்றது. பெத்தும் நிஸ்ஸங்க 37 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றார்.
146 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்த இங்கிலாந்து அணி, 12.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது. டொம் பெண்டன் ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்களைப் பெற்றார்.
இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2–0 என இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது.