2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முடிவுற்ற யுத்தம் பேசுகின்ற கதைகள் பல,அவற்றுள் பேசாப்பொருளாக மறைந்திருக்கும் துயரங்களும் பல. வேருடன் தூக்கி எறியப்பட்ட மக்களை வீதி வீதியாகத் தேடிச்சென்று மருத்துவம் பார்த்த மகத்தான மனிதர்கள் பற்றிய கதை இது…..வன்னி மண்ணின் மகோன்னதமான காலத்தில் மருத்துவதுறையின் எழுச்சியும் வீழ்ச்சியும் எவ்வாறு நடந்தது என கூறும் கதை இது….
முள்ளிவாய்க்கால் வைத்தியர் என அறியப்பட்ட வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்கள் கிளிநொச்சியில் பிறந்து அதேமாவட்டத்தில் கல்வி கற்று மருத்துவ பீடம் சென்றவர். வைத்தியராக வெளியேறியவர் இன்றுவரை அந்த மண்ணில் சேவைசெய்து வருகின்றார். முள்ளிவாய்க்கால் வரை தனது அர்ப்பணிப்பான சேவையால் பல உயிர்களை காத்து நின்றவர். அந்த நாட்களில் மக்களுடன் அவரும் அவருடன் இருந்த மருத்துவக்குழுவும் செய்த சேவைகள் பற்றி மனம் திறக்கின்றார் …..
– வணக்கம்LONDON –
இவ்வாறு சேவைகள் தொடர்ந்துகொண்டு இருக்கையில் நாளுக்கு நாள் நோயாளிகளின் வரவு அதிகரித்த வண்ணம் இருந்தன. வைத்தியசாலைகளின் சேவைகளை விரிவுபடுத்த வேண்டிய தேவை அங்கே கடமையில் இருந்தவர்களுக்கு வெளிப்படையாக உணர்த்தப்பட்டது. வைத்தியர்கள் அநேகர் ஓர் பிரிவிற்கு உரிய முக்கிய பொறுப்பை ஏற்று நடத்தினர்.
கிளிநொச்சி வைத்தியர் சங்கத்தின் மாதாந்த கலந்துரையாடல்கள் நடைபெற்றன. இக் கலந்துரையாடல் வைத்தியர்களிடையே கூடிய புரிந்துணர்வை ஏற்படுத்தியது.
இதே காலப்பகுதியில் MSF தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த மகப்பேற்று வைத்திய நிபுணர், குழந்தை வைத்திய நிபுணர் மற்றும் ஆய்வுகூட நிபுணர் உள்ளடங்கலாக இக் குழுவின் சேவை மிக வரவேற்கத்தக்க வகையில் 2007ம் ஆண்டு காலப்பகுதியில் இயங்கியது. MSF தொண்டு நிறுவன வைத்தியர்கள் ஏனைய துறைசார்ந்த உத்தியோகத்தர்களுக்கு மேலதிக பயிற்சியை வழங்குவதில் கரிசனை செலுத்தினார்கள். அக் காலப்பகுதியில் கடமையாற்றிய ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த குழந்தை வைத்திய நிபுணர் மார்க் அவர்கள் விசேட வகுப்பினை நடத்தினர்.
இதுமட்டுமல்லாது பல விசேட பிரிவுகள் ……..
தொடரும்…..
வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி | கிளிநொச்சியில் இருந்து
முன்னைய அங்கங்கள்…….
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-1/
http://www.vanakkamlondon.com/mullivaikaal-2/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-3/