Saturday, September 25, 2021

இதையும் படிங்க

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 50 | பத்மநாபன் மகாலிங்கம்

ஒவ்வொரு அரச உத்தியோகத்தரும், தாங்கள் மக்களுக்காக சேவை செய்ய நியமிக்கப்பட்டவர்கள் என்பதையும், அவர்களின் வரிப்பணத்தில் தான் தங்களது சம்பளம் வழங்கப்படுகிறது என்பதையும், உணர்ந்து கொள்ள வேண்டும். தங்கள் அலுவலக சூழலை...

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 49 | பத்மநாபன் மகாலிங்கம்

பறம்பு மலையை ஆண்டு வந்த மன்னன் முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி வள்ளல். அவனது மலையின் செல்வச் செழிப்பையும், கொடையால் அவன் பெற்ற பேரையும் புகழையும் அறிந்து மூவேந்தர்களான சேர,...

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 48 | பத்மநாபன் மகாலிங்கம்

தஸ்றத் மஞ்சி (Dashrath Manji) என்பவர் ஒரு வரலாறு படைத்த மனிதர். அவர் இந்தியாவில் சொந்த நிலமற்ற ஒரு ஏழை மனிதர். அவரது கிராம மக்கள் வைத்தியம் செய்வதாயின், ஒரு...

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 47 | பத்மநாபன் மகாலிங்கம்

இலங்கையின் ஏனைய பகுதிகளில் ஏற்பட்ட மாற்றம் ஒன்று மெல்ல மெல்ல வன்னியிலும் ஏற்பட்டது. ஓரளவு வசதி உள்ளவர்கள் உழவு இயந்திரங்களை (Tractor => a ploughing machine) வாங்கி வயல்களை...

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 46 | பத்மநாபன் மகாலிங்கம்

அந்த காலத்தில் மக்களிடையே தொடர்புகள் ஏற்படுத்த, தபால்கந்தோர் முக்கிய இடத்தை வகித்தது. கடிதம், போஸ்ட் காட், பதிவு தபால், புத்தக பொதி, பொதிகள்...

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 45 | பத்மநாபன் மகாலிங்கம்

இரண்டு வகையான ' போஸ்ட் காட் ' விவசாயிகள் (post card farmers) யாழ்ப்பாண குடாநாட்டில் இருந்து வந்து வன்னியில் வயல்களை பெற்றார்கள். ஒரு பகுதியினர் மலையகத்திலிருந்து வந்த, காணியில்லாத...

ஆசிரியர்

இராணுவத்திற்கு கொரோனா: வடகிழக்கிற்கு பேராபத்து? – தீபச்செல்வன்

எதற்கெடுத்தாலும் சிங்களவர்கள் என்ற மனநிலையும் எதற்கெடுத்தாலும் இராணுவம்தான் என்ற மனநிலையும் இலங்கையின் மகாவம்ச மனநிலையின் வெளிப்பாடு ஆகும். இதனாலும் ஈழத் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்திப் போராட நேரிட்டது. இதனாலும் ஈழத் தமிழ் மக்கள் தனிநாடு கோரிய போராட்டத்தை தொடங்கினர். இப்போது ஜனாதிபதியான கோத்தபாய ராஜபக்ச, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் போதும் இராணுவத்தை பயன்படுத்தி வருகின்றமை பலரதும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இதன் விளைவுகள் தற்போது அறுவடையாகத் தொடங்கியுள்ளன.

தற்போதைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச, தேசிய கொரோனா தடுப்பு நிலையத்தின் தலைவராக இராணுவத் தளபதி சவேந்திரசில்வாவை நியமித்திருந்தார். அத்துடன் முப்படையினரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டனர். எதற்கெடுத்தாலும் இராணுவத்தை முன்னிலைப்படுத்தும் இலங்கை அரசின் போக்கில் சில அரசியல்கள் இருப்பதையும் முன்னைய பத்திகளில் சுட்டிக்காட்டப்பட்டது. சவேந்திர சில்வா இனப்படுகொலை குறித்த குற்றங்களுடன் தொடர்புடையவராக தமிழர்களால் குற்றம் சுமத்தப்பட்டவர். அத்துடன் அமெரிக்கா அவருக்கு பயணத்தடையையும் வித்திருந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையிலும் சவேந்திர சில்வா போர்க்குற்றங்களை இழைத்திருப்பதாக கூறப்பட்டிருக்கின்றது.

கொரோனாவை தடுத்த உயிர் காத்த வீரராக அவரை சித்திரிக்கும் முகமாகவும் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் குறித்த இரத்தக்கறைகளை கழுவும் விதமாகவுமே இந்த சவேந்திர சில்வா கொரோனாவை தடுக்கும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கொரோனோ பேரிடர் காலத்தில் அரசியல் பேசவோ, குற்றங்களை சுமத்தவோ வாய்ப்பிருக்காது என்ற நோக்கிலேயே சந்தர்ப்பம் பார்த்து, இந்த நியமனத்தை ஜனாதிபதி கோத்தபாய வழங்கியுள்ளார்.

இதன் விளைவே தற்போது கொரோனாவை காவும் காவிகளாக படைத்தரப்பினர் மாறியுள்ளனர். இதுவரையில் சுமார் 200க்கு மேற்பட்டவ கடற்படையினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இராணுவத்தினருக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்தால், அது வடக்கு கிழக்கு மக்களையே அதிகம் பாதிக்கும். ஏனெனில் இராணுவத்தினர் பல லட்சக்கணக்கானவர்கள் தமிழர் தாயகத்திலேயே நிலை கொண்டுள்ளனர். இதனால் தமிழ் மக்கள் பெரும் ஆபத்துக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது.

தென்னிலங்கையில் அதுவும் கொரோனா பாதிப்பு மிகுந்த மாவட்டங்களுக்கு விடுமுறையில் சென்று வரும் படையினர், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ் நகரங்களில் வந்து மக்கள் செல்லும் கடைகளுக்கும் ஏரிஎம் எந்திரங்களுக்கும் எந்தக் கட்டுப்பாடுமின்றி செல்லுகின்றனர். இதனால் தமக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுமோ என்று மக்கள் அஞ்சுகின்றனர். இவை குறித்து மக்கள் பிரதிநிதிகள் அரசாங்கத்திற்கு எடுத்துரைக்க வேண்டும். ஆனால் தற்போது மக்கள் பிரதிநிதிகள் மிகவும் பாதுகாப்புடன் வீடுகளில் தங்கியுள்ளனர். சிறந்த பிரஜைகளாக அரசியல் பிரதிநிதிகளே கொரோனா விழிப்புணர்வை பின்பற்றுகின்றனர்.

இதைத் தவிர, வடக்கு கிழக்கில் கொரோனா தனிப்படுத்தல் மையங்களை அமைக்கின்ற வேலைகளிலும் அரசு மும்மரமாக ஈடுபட்டு வருகின்றது. இலங்கையில் 4 பரிசோதனை நிலையங்களே உள்ளன. கொழும்பு அங்கொடை வைத்தியசாலை, கண்டி போதனா வைத்தியசாலை, கராப்பிடிய போதனா வைத்தியசாலை மற்றும் அனுராதபுரம் போதனா வைத்தியசாலை முதலியவை ஆகும். அத்துடன் இலங்கையில் உள்ள 24 வைத்தியசாலைகளில் கொரோனா தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நோயாளிகள் பராமரிக்கப்படுகின்றனர்.

இலங்கை முழுவதிலும் 14 கொரோனா தனிமைப்படுத்தல் மையங்கள் உள்ளன. இதில் 12 மையங்கள் வடக்கு கிழக்கில் அமைக்கப்பட்டிருப்பதே மிகவும் அதிர்ச்சியானது. தற்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் 3ஆயிரத்து 292 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அத்துடன் சுமார் 4ஆயிரத்து 500பேர் இதுவரையில் கண்காணிக்கப்பட்டு வெளியேறியுள்ளனர். வடக்கில் 6 தனிமைப்படுத்தல் மையங்களும் கிழக்கில் எட்டு தனிமைப்படுத்தல் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

வடக்குமாகாணத்தில் பம்பைமடு பெண்கள் இராணுவ முகாம், பெரியகட்டு இராணுவ முகாம், பூவரசன்குளம் வேலங்குளம் விமானப்படை முகாம், முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படை முகாம், இரணைமடு விமானப்படை முகாம், யாழ்.கொடிகாமம் 522 ஆவது படை முகாம் முதலிய இடங்களிலும் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு புணானை பல்கலைக்கழகம், கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையம் மற்றும் அம்பாறையில் 6 இராணுவ முகாங்களிலுமாக தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மக்கள் செறிவற்ற பல பிரதேசங்கள் தென்னிலங்கையில் காணப்படுகின்றன. மத்தளை விமான நிலையம் போன்ற வசதியுள்ள இடங்கள் இருக்கின்ற நிலையில், ஏன் வடக்கு கிழக்கில் அதிகமான தனிமைப்படுத்தல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன? இதிலும் ஒரு ஆக்கிரமிப்பு மனநிலையையும் பாரபட்ச மனநிலையும் அரசு வெளிப்படுத்துகிறது. தமிழர்களின் பகுதி என்பதால் அவர்களுக்கு நோய் ஏற்படட்டும் என்ற பாரபட்சத்தின் வெளிப்பாடா என்றே மக்கள் ஐயம் கொள்ளுகின்றனர்.

வடக்கு கிழக்கில் பல பிரதேசங்கள் கொரோனா அபாயமற்ற பிரதேசங்களாக காணப்படுகின்றன. வடக்கில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் முதலிய மாவட்டங்கள் கொரோனா தொற்று இல்லாத பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது சில பாடசாலைகளை கையகப்படுத்த இராணுவத்தினர் முனைகின்றமை மக்கள் மத்தியில் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் முல்லைத்தீவில் பாடசாலை ஒன்றை கொரோனா தனிமைப்படுத்தல் மையமாக கையகப்படுத்த மேற்கொண்ட முயற்சி மக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது. கொரோனா அபாயத்தால் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. அவற்றைக் கொரோனா தனிமைப்படுத்தல் மையங்களாக பயன்படுத்தினால் பிற்காலத்தில் மாணவர்கள் சுகாதார சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் என்பதே மக்களின் அச்சமாகும். அத்துடன் தமது பகுதியில் உள்ள மக்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படலாம் என மக்கள் அஞ்சுகின்றனர்.

கொரோனாவை தடுக்க எல்லோரும் வீட்டில் இருங்கள் என்கிறது அரசு. இது இராணுவத்திற்கும் பொருந்துமல்லவா? அதனை கைக்கொள்ள மறுத்தமையினாலேய இப்போது கடற்படையினர் கொரோனாவின் பிடிக்குள் அகப்பட்டுள்ளனர். வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் நிலை கொண்டிருப்பது, தமிழ் மக்களை பல வகையிலும் அச்சுறுத்துகின்ற விசயமாகும். மக்களின் அன்றாட வாழ்க்கையை மாத்திரமின்றி, அவர்களின் வாழ்வாதாரத்தை மாத்திரமின்றி, அவர்களின் மனநிலையை பாதிப்பது மாத்திரமின்றி, இதுபோன்ற நோய் தொற்று அபாய காலத்தில் உயிருக்கும் அச்சுறுத்தலானது. இராணுவ நீக்கம் என்பது மக்களின் வாழ்வுக்கு எந்தளவு அவசியம் என்பதையும் கொரோனா உணர்த்துகின்றது.

கவிஞர் தீபச்செல்வன்

இதையும் படிங்க

கூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும் | ஆசி கந்தராஜா

'கூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும்' (எனது பழைய கோப்பிலிருந்து) அம்மா வழியில் நெருங்கிய உறவினரான ஒரு பெத்தாச்சியின் வீடு...

சுவடுகள் 03 | தடை தாண்டிய பயணங்கள் | டாக்டர் ரி. கோபிசங்கர்

இந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால்...

சமூக இலக்கியப் போராளி நந்தினி சேவியர் | செல்லத்துரை சுதர்சன்

அஞ்சலிக் குறிப்பு நள்ளிரவில் முருகபூதி அண்ணரின் திடீர் அஞ்சல் செய்தி என்னை அதிர்ச்சியுறச் செய்தது. ‘சேவியர் அங்கிள்’ என்று...

சுவடுகள் 02 | புட்டு | டாக்டர் ரி. கோபிசங்கர்

பின்னேரம் புகைக்கூட்டடியில ஆணியில தொங்கிக்கொண்டிருந்த சுளகை எடுத்து அதில ஒட்டியிருந்த காய்ஞ்சு போன பழைய மாவை தட்டி சுரண்டிப்போட்டு , சாடையா...

ஸ்ரீலங்காவை பாதுகாக்க ஐ.நாவில் புலிகளை பலியிட வேண்டாம்!: அவதானிப்பு மையம்

கூட்டமைப்புக்கு அவதானிப்பு மையம் கடும் கண்டனம்! ஸ்ரீலங்கா அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்காக ஈழத் தமிழ் மக்களின் விடுதலைக்கும் உரிமைக்கும் உன்னத...

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 51 | பத்மநாபன் மகாலிங்கம்

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்" - திருவள்ளுவர்  பூமியில் வாழவேண்டிய முறையில்,...

தொடர்புச் செய்திகள்

மிச்சேல் பச்லற் அம்மையாரே! கிரிசாந்தி, இசைப்பிரியாக்களுக்கான நீதியை தருவீர்களா? | தீபச்செல்வன்

பெண்களுக்கு இழைக்கப்படுகிற அநீதிகள் ஒரு சமூகத்தின் வேரைத்தான் பாதிக்கின்றது. தாய்மொழியையும் பண்பாட்டையும் மனித சமூகத்திற்கு பரிமாற்றம் செய்கின்ற மகத்துவமான பெண்கள் ஒரு இனத்தின்...

தென்னிந்திய திரைத்துறையினுள் பாடலாசிரியராக கவிஞர் தீபச்செல்வன்

எழுதியவர் :வெற்றி துஷ்யந்தன் இயக்குனர் ரஞ்சித் யோசப்பின் இயக்கத்தில் வெளியான திரைப்படம்...

நூல்களை ஆராத்திக்கும் ஆர்வலனுக்கு அமுதவிழா | கவிஞர் தீபச்செல்வன்

இலக்கிய உலகில் பெயர் என்பது ஒரு அடையாளம். சொந்தப் பெயராகவோ புனைபெயராகவே இருக்கலாம். எழுத்து வழியாக ஒரு எழுத்தாளன் முகவரியைத் தேடுகிறான். தன்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மன்னாரில் திலிபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

மன்னாரில் எதிர்வரும் 26 ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் தீலிபனின்  நினைவேந்தல் நிகழ்வு ஒன்றை மேற்கொள்ள இருப்பதாக கூறி மன்னார் ...

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய 334 பேர் கைது

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில்...

6 விக்கெட்டுகளால் பெங்களூருவை வீழ்த்தி மீண்டும் முதலிடத்தில் சென்னை

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 6 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. 2021 ஐ.பி.எல். தொடரில் நேற்றிரவு சார்ஜாவில்...

மேலும் பதிவுகள்

குழந்தைகளுக்கு சத்தான வெஜிடபிள் பணியாரம்

காய்கறிகளை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு பணியாரம் செய்யும் போது அதில் காய்கறிகளை கலந்து செய்து கொடுக்கலாம். இதனால் காய்கறிகளின் சத்து குழந்தைகளுக்கு கிடைக்கும்.

இலங்கை உட்பட நான்கு நாடுகளுடன் சொந்த மண்ணில் மோதப்போகும் இந்தியா

2021-22 ஆம் ஆண்டில் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் விளையாடும் போட்டிக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நேற்று...

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 418 பேர் கைது

தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை காலை 06.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் 489 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறையில் இருந்து சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்ற விடுதலைப் புலி சந்தேகநபர்

விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்தவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவர் சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச மறுத்துவிட்டு நாடகமாடும் அரசாங்கம் | சுமந்திரன்

நாட்டின் உள்ளகப்பிரச்சினைகளை தீர்க்க சர்வதேச புலம்பெயர் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை நாம் வரவேற்கின்றோம், ஆனால் முதலில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகிய எம்முடன் முதலில்...

‘கான்ட்ராக்டர் நேசமணி’ ஆக களமிறங்கும் யோகிபாபு

யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி...

பிந்திய செய்திகள்

டெல்லி கோர்ட்டில் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவலை!

புதுடெல்லி:தலைநகர் டெல்லியின் ரோஹினி பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கறிஞர்கள் போல் நுழைந்த கும்பல், நேற்று மதியம் திடீரென துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியது. இதில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய...

யாழில் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய சந்தேகநபர்கள் நால்வர் கைது!

யாழ்ப்பாணம்- மருதனார்மடம் சந்தியில் பழக்கடை நடத்துபவர் மீது கொலைவெறித் தாக்குதல் மேற்கொண்ட வன்முறைக் கும்பலைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும்,...

வவுனியாவில் 806.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு!

வவுனியாவில் இந்த வருடம் ஜனவரி முதல் இன்று (சனிக்கிழமை) அதிகாலை 8 மணிவரையுடன் நிறைவடைந்த காலப்பகுதியில், 806.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது .

பதிவு செய்யப்படாத தனியார் சொத்துக்களை பதிவு செய்யுமாறு கொழும்பு மாநகரசபை அறிவிப்பு!

கொழும்பு மாநகரசபை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பதிவு செய்யப்படாத தனியார் சொத்துக்களை பதிவு செய்யுமாறு உரிமையாளர்களுக்கு கொழும்பு மாநகரசபை அறிவித்துள்ளது. கொழும்பு மாநகர ஆணையாளர்...

மம்தா பானர்ஜி இத்தாலியில் நடக்கும் அமைதி மாநாட்டில் பங்கேற்க ஒன்றிய அரசு அனுமதி மறுப்பு..!

டெல்லி: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இத்தாலியில் நடக்கும் அமைதி மாநாட்டில் பங்கேற்க ஒன்றிய அரசு அனுமதி மறுத்துள்ளது. இந்த ஆண்டு அக்டோபரில் இத்தாலியில் நடைபெறவுள்ள உலக அமைதி...

தமிழர் தாயக ஆக்கிரமிப்பை எடுத்துக்காட்டும் “தாய்நிலம்” ஆவணப்படும் இன்று வெளியீடு!

தமிழர் தாயகத்தில் இடம்பெறும் நில அபகரிப்பை எடுத்துக்காட்டும் ‘தாய்நிலம்’ என்ற ஆவணப்படம் இன்று சனிக்கிழமை லண்டன் நேரம் பிற்பகல் 1.00 மணி, டொரண்டோ மற்றும் நியுஜேர்சி நேரம் காலை 8...

துயர் பகிர்வு