செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் உக்ரைன் போர் வீரரின் மகத்தான தியாகம்

உக்ரைன் போர் வீரரின் மகத்தான தியாகம்

1 minutes read

உக்ரைனின் கெர்சன் பிராந்தியத்தில் ரஷ்யாவின் முன்னேற்றத்தைதடுக்க பாலத்தில் தன்னைத்தானே வெடிகுண்டாக வெடிக்கச் செய்தார் உக்ரேனிய இராணுவ வீரர்.

உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.

கிரிமியாவிலிருந்து ரஷ்யப் படைகள் அத்துமீறி நுழைவதைத் தடுக்க   உக்ரைன் இராணுவ வீரர் ஒருவர் தன்னைத்தானே வெடிகுண்டாக வெடிக்கச் செய்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கெர்சன் பிராந்தியத்தில் உள்ள ஹெனிசெஸ்க் பாலத்தில் ரஷ்ய டாங்கிகளின் வரிசையைத் தடுக்க  துணிச்சலாக செய்லபட்டு  வீர மரணம் அடைந்து உள்ளார் விட்டலி ஸ்காகுன் வோலோடிமிரோவிச் என்ற உக்ரைன் நாட்டு போர் வீரர்.

ஜெனரல் ஸ்டாப்  தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு உள்ள பதிவில் ரஷ்யாவை  தடுப்பதற்கான ஒரே வழி பாலத்தை தகர்ப்பதுதான் என்று முடிவு செய்தது.

ஸ்காகுன் வோலோடிமிரோவிச்  தப்பிக்க நேரமில்லை. அவர் தனது தோழர்களிடம் தன்னை தானே வெடிக்க வைக்கப் போவதாகக் கூறினார்.பின்னர் அவர்கள் வெடிக்கும் சத்தம் கேட்டது.

ரஷ்ய ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவை உக்ரைனின் பிரதான நிலப்பரப்புடன் இணைக்கும் பாலத்தின் அருகே ரஷ்ய இராணுவ வீர்ரகளின்  மரணத்தை உக்ரைனின் ஆயுதப்படைகள் உறுதிசெய்தன.

ஆயுதப்படை அதிகாரி ஒருவர் கூறுகையில்,

வோலோடிமிரோவிச் பாலத்தில் வெடிபொருட்களை வைக்க முன்வந்த பிறகு அதை வெடிக்கச் செய்ய முடிவு செய்துள்ளார் “பாலம் துண்டானது. ஆனால் அவர் அங்கிருந்து தப்பிக்க முடியவில்லை,”” என்று அவர்கள் விளக்கினர்.

அவரது முயற்சிகள் மற்றும் உக்ரேனிய ஆயுதப்படைகளின் முயற்சிகள் ரஷ்யர்களை பின்தங்க செய்து உள்ளது என மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

ரஷ்ய துருப்புக்கள் அவர்கள் எதிர்பார்த்ததை விட ‘அதிக எதிர்ப்பை’ சந்திக்கின்றன என தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.