செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் விரல் வருத்துக்காரரும் வில்லுப்பாட்டுக்களும் | த. செல்வா

விரல் வருத்துக்காரரும் வில்லுப்பாட்டுக்களும் | த. செல்வா

1 minutes read

திருப்பித் திருப்பி இந்த விடையத்தை அலட்டக் கூடாது அல்லது ஆர்வக் கோளாறில் உளறக் கூடாது என்று நினைத்தால் கோபம் கொப்பளிக்குமாறு சிலரின் பதிவுகள்

அதுவும் தம்மை ஏதோ அரசியல் விமர்சகர்களாகவும் தமிழ்த் தேசியவாதியாகவும் காட்டிக் கொள்வோரின் உளறல் தாங்க முடிய வில்லை

சமூக வலைத்தளமென்பது இன்று சக்தி வாய்ந்த ஊடகம் ஆனால் ஊடக அறிவு சொல்வது போல் செய்திகள் எல்லாம் நிகழ்பவவை அல்ல

நிகழ்த்தப்பட நினைப்பவை
அல்லாது நிகழாமல் இருக்கச் செய்பவை
அல்லது கற்பனை மற்றும் வியாபாரமாக அமைபவை

இந்த இடத்தில்தான் ஈழத்தமிழர்கள் தவறிழைத்துவிடுகின்றனர்

இன்று உலகம் சுருங்கிவிட்டது
பெரும்பாலும் ஊடகமே உலகத்தை இயக்குகின்றது
எனவே அதைக் கையாள்வதில் தூரநோக்கும் நுட்பமான பார்வையும் வேண்டும்

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு என வள்ளுவன் சொன்ன குறளுக்கேற்ப வாழப் பழக வேண்டும்

ஈழத்தில் நடந்த விமான தாக்குதல்களில் பின்னணியில் உக்ரைன் இருந்தது இவர்களுக்கு தெரியுமா?

ஆயுதந்தருவதாய் பணத்தைவாங்கி போராட்டத்தையும் அதற்குள் அகப்பட்ட அப்பாவிக் குழந்தையையும் கொல்லச் செய்தது உக்ரைன் அரசு

இது இப்படி இருக்க இன்றைய உக்ரைன் தலைவரும் அன்றைய காமடி நடிகருமான நபர் போரில் நேரடியாக பங்குபற்றுகிறார் எமது தலைவர் போல் எனப்பதிவிடுவதானது ஆர்வக்கோளாறும் அரசியல் பேதைமையும் தமிழரின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் கைங்கரியமுமாகும்

முதலில் உள்நாட்டுப்போர் வேறு
நாடுகளுக்கிடையேயான போர் வேறு

விடுதலைப்போர் வேறு
வியாபாரப் போர் வேறு

விடுதலை வீரன் என்பவன் வேறு
அரசியல்த் தலைவன் என்பது வேறு

புரட்சிக்கான போர்வேறு
பிராந்திய இறைமைக்கான போர் வேறு

என்ற புரிதல் வேண்டும்

அதற்காக எங்கள் பிணங்களை வைத்து அங்கும் பிணங்கள் வேண்டுமா என சில முற்போக்குப் பிற்போக்குவாதிகள் நற்போக்கு கதைக்க முயலலாம்
அது இங்குவிடையமல்ல

எழுதத் துணிபவர்கள்
எல்லோருமாக அன்று எங்களுக்கு நீங்கள் எத்தகைய கொடுமையை செய்தீர்கள் என்ற நினைவு படுத்தலைத் தாங்கி எழுத முன்வர வேண்டும்

ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும்அந்தக் கிபிர் பீரங்கித் தாக்குதல்களையும் எம் கண்முன்னே கொன்றொழிக்கப் பட்டோரையும் மறக்க மாட்டோம் என்பதைச் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும்

எண்ணிக்கை முக்கியமல்ல
நல்ல எண்ணங்கள் முக்கியம் என்ற தத்துவம் உயிர்பெற வேண்டும்

நான் சிறிய தேசம் கொஞ்சத் தமிழர் எனவே கெஞ்சி வாழ வேண்டும் என்ற தாழ்வு மனப்பான்மை உடைக்கப்பட வேண்டும்

தவறு செய்தோன் எந்தப் பெரிய சக்தியாயினும் ஏதோ ஒரு காலத்திலே தண்டனை கிடைக்கும் என்ற நிலையை நிருபிக்க வேண்டும்

எம்மிடையே ஏராளம் எழுத்துக்கறுத்தாடுகள் உண்டு
ஒரு சிங்களச் சகோதரன் நல்லது செய்துவிட்டால் ஒட்டுமொத்த சிங்களவர்களும் எமக்கு நல்லதையே செய்தார்கள் என ஆர்வக்கோளாறில் காவியம் எழுதுவது

அல்லது ஒரு பாடகியை ஊடகி ஆக்குவது
இத்தகையை சோசல்மீடியாப் பதிவுகள் மாற்றப்படவேண்டும் தமிழரின் வெந்த காட்டை தணிய வைப்பது போன்றது

ஆயிரந்தான் தத்துவம் சொன்னாலும்
இசைப்பிரியாவின் நீதி கிடைத்ததா
பாலச்சந்திரனின் நீதி கிடைத்ததா
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான
பதில் கிடைத்ததா
கையிலே ஒப்படைத்த இளைஞர்கள் மீண்டுவந்தனரா

இது இவ்வாறே இருக்க
போரின் நிறம் தெரியாதோரே
உங்கள் விரல் வருத்தத்தை இனியேனும் கொஞ்சம் நிறுத்தி வையுங்கள்
எல்லோர்க்கும் காமானது
பலம் பலவீனங்களைக் கடந்து நல்ல பதில் கொடுக்கும் வரை

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.