செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் தங்கள் ரொக்கெட்டில் இருந்து இந்தியாவின் கொடியை தவிர பிற நாடுகளின் கொடிகளை ரஷ்யா அகற்றியுள்ளது.
கஜகஸ்தானின் பைகானூர் ஏவுதளத்தில் இருந்து ரஷ்யாவின் சோயுஸ் ரொக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
அந்த ராக்கெட், ஒன்வெப் என்ற திட்டத்தின் கீழ் இணையதள சேவைக்காக பல்வேறு நாடுகளின் 36 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு சுமந்து செல்ல உள்ளது.
போர் காரணமாக பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதித்து வரும் நிலையில், ரொக்கெட்டில் இருந்து இந்திய கொடியை தவிர்த்து அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து ஆகிய நாடுகளின் கொடிகள் அகற்றப்பட்டுள்ளன.
இது குறித்து தெரிவித்த ரஷ்ய விண்வெளி நிறுவனத்தின் தலைவர் டிமிட்ரி ரோகோசின், தங்கள் ராக்கெட்டில் சில நாடுகளின் கொடிகள் இல்லாமல் இருப்பது சிறப்பாக இருக்கும் என கருதுவதாக கூறினார்