Sunday, May 5, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் தற்காலிகமாக போர் நிறுத்தப்படுவதாகவும் ரஷியா அறிவிப்பு

தற்காலிகமாக போர் நிறுத்தப்படுவதாகவும் ரஷியா அறிவிப்பு

1 minutes read

உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் சேர்ந்தால் அது தனக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று கருதிய ரஷியா, கடந்த மாதம் 24-ந் தேதி அந்த நாட்டின் மீது போரை தொடங்கியது. உக்ரைன் மீது சரமாரியாக ஏவுகணைகளையும், குண்டுகளையும் வீசி ரஷியா தாக்குதல் நடத்தி வந்தது

இதற்கு பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தும் தாக்குதலை ரஷியா தொடர்ந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 9 நாட்களாக நடைபெற்று வந்த உக்ரைன் மீதான போர் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ரஷியா அறிவித்துள்ளது.

மக்கள் நலன் கருதி உக்ரைன் உள்ளூர் நேரப்படி காலை 6 மணி முதல் போர் நிறுத்தப்படுவதாகவும் மேலும் உக்ரைனில் சிக்கியுள்ளவர்கள் வெளியேற வசதியாக தற்காலிகமாக போர் நிறுத்தப்படுவதாகவும் ரஷியா தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More