செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் பொருளாதார தடைகளை மீறி ரஷ்யா மீண்டும் எழும் | விளாடிமிர் புடின்

பொருளாதார தடைகளை மீறி ரஷ்யா மீண்டும் எழும் | விளாடிமிர் புடின்

0 minutes read

ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதித்த மேற்கு நாடுகளுக்கு எதிராக மொஸ்கோ மீண்டும் எழும் என்று ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

Vladimir Putin sits in front of a Russian flag

அதேநேரம் உணவு மற்றும் எரிசக்தி விலைகள் உட்பட ரஷ்யா அதன் பிரச்சினைகளைத் தீர்த்து வலுவானதாக வெளிப்படும் என்றும், ரஷ்யா ஒருவித குறுகிய கால பொருளாதார ஆதாயத்திற்காக தனது இறையாண்மையை சமரசம் செய்வதை ஏற்றுக்கொள்ளும் நாடு அல்ல என்றும் புடின் வலியுறுத்தினார்.

ரஷ்யப் படைகள் அண்டை நாடான உக்ரேனை ஆக்கிரமித்த இரண்டு வாரங்களுக்குப் பின்னர் ஒரு தொலைக்காட்சி  அரசாங்கக் கூட்டத்தின் போதே அவர் கூறினார்.

ஐரோப்பாவின் எரிவாயுவில் மூன்றில் ஒரு பங்கை வழங்கும் ஒரு பெரிய எரிசக்தி உற்பத்தியாளரான ரஷ்யா, அதன் எண்ணெயை அமெரிக்கா வாங்குவதைத் தடை செய்வது உட்பட விரிவான பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்டாலும், அதன் ஒப்பந்தக் கடமைகளைத் தொடர்ந்து சந்திக்கும் என்று புடின் இதன்போது மேலும் கூறினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.