செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் உக்ரேன் தலைநகர் கீவ்வில் பொதுமுடக்கம் அமுல்

உக்ரேன் தலைநகர் கீவ்வில் பொதுமுடக்கம் அமுல்

0 minutes read

ரஷ்ய படைகள் நெருங்கி வரும் நிலையில் உக்ரேன் தலைநகர் கீவ்வில் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. 

உக்ரேனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தும் வருகின்றன. ஆனால், சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது.

உக்ரேனின் தலைநகர் கீவ் நோக்கி ரஷ்ய படைகள் முன்னேறி வருகின்றன. மேலும், பொதுமக்கள் குடியிருப்புகள், வைத்தியசாலைகள், பாடசாலைகள் மீதும் தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், உக்ரேன் தலைநகர் கீவ்வில் இன்று இரவு (செவ்வாய்) முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது. கீவ் முழுவதும் இன்று இரவு முதல் அடுத்த 36 மணி நேரத்திற்கு முழு பொதுமுடக்கம் அமுல்படுத்தப்படுவதாக நகர மேயர் தெரிவித்துள்ளார்.

கீவ் நகர் நோக்கி ரஷ்ய படைகள் நெருங்கி வரும் சூழ்நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கும்படியும், பதுங்கு குழிகளை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.