செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் உலகின் சுதந்திரத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது | போலந்தில் அமெரிக்க படையினர் மத்தியில் பைடன்

உலகின் சுதந்திரத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது | போலந்தில் அமெரிக்க படையினர் மத்தியில் பைடன்

1 minutes read

உலகின் சுதந்திரத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி அமெரிக்க படையினருக்கு தெரிவித்துள்ளார்.

போலந்து உக்ரைன் எல்லையில் உள்ள தளத்தில் அமெரிக்க படையிரை சந்தித்தவேளை ஜோ பைடன் இதனை தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவில் படையினரை நிறுத்தியுள்ளதை ஏதேச்சதிகாரத்திற்கும் ஜனநாயகத்திற்குமான போராட்டத்தின் ஒரு பகுதி என பைடன் தெரிவித்துள்ளார்.

உலகின் வரலாற்றிலேயே மிகத்திறமையான இராணுவத்தினர் நீங்களே நீங்கள் ஈடுபட்டுள்ள நடவடிக்கை காரணமாக சாதகமான விளைவுகள் ஏற்படு;ம் என பைடன் தெரிவித்துள்ளார்.

உங்களின் பி;ள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் எவ்வாறான சுதந்திரத்தை அனுபவிக்கப்போகின்றனர் என்ற விடயத்திற்கே தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ள பைடன் உக்ரைன் மக்களின் வேதனைகளையும் துன்பத்தையும் உங்களால் போக்க முடியுமா என்பதை விட முக்கியமான விடயத்தில் நீங்கள் ஈடுபட்டுள்ளீர்கள் எனவும் அமெரிக்க படையினருக்கு தெரிவித்துள்ளார்.

பெப்ரவரி மாதம் முதல் அமெரிக்கா ஐரோப்பாவிற்கு 12000 படையினரை அனுப்பியுள்ளது,இவர்களில் பலர் போலந்தில் நிலைகொண்டுள்ளனர்,நேட்டோ நாடுகளை ரஸ்யா அச்சுறுத்துவதை தடுப்பதற்காகவும் மனிதாபிமான உதவிகளிற்காகவும் இவர்களை நிலைகொள்ளச்செய்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது,

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.