செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா சீன ஜனாதிபதியாக மீண்டும் ஷி ஜின்பிங்!

சீன ஜனாதிபதியாக மீண்டும் ஷி ஜின்பிங்!

0 minutes read

சீனாவின் ஜனாதிபதியாக மீண்டும் ஷி ஜின்பிங் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

69 வயதையுடைய ஷி ஜின்பிங், தொடர்ந்து மூன்றாவது முறையாக ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து 5 ஆண்டுகள் சீனாவை ஷி ஜின்பிங் ஆட்சி செய்யவுள்ள நிலையில், சீனாவை அதிக முறை ஆட்சி செய்த பெருமையை அவர் பெறுகின்றார்.

அத்துடன், சீன இராணுவ ஆணையத்தின் தலைவராகவும் ஷி ஜின்பிங் மீண்டும் பொறுப்பேற்கவுள்ளார்.

சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டு, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் மூன்றாவது முறையாக கட்சியின் தலைவராக ஷி ஜின்பிங் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சீன பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 14ஆவது தேசிய மக்கள் மாநாட்டில் சுமார் 3,000 உறுப்பினர்கள் மீண்டும் சீன ஜனாதிபதியாக ஷி ஜின்பிங்கை தெரிவுசெய்ய ஆதரவளித்துள்ளனர்.

ஷி ஜின்பிங்கிற்கு எதிராக ஒருவர்கூட போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.