செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் மன்னர் சார்லஸின் முடிசூட்டை சிறப்பிக்கும் நாணயம் வெளியீடு

மன்னர் சார்லஸின் முடிசூட்டை சிறப்பிக்கும் நாணயம் வெளியீடு

0 minutes read

கடந்த மே மாதம் நடைபெற்ற மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட 50 பென்ஸ் நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்து நாணயங்களை அதிகாரப்பூர்வமாக தயாரிக்கும் ‘த ராயல் மின்ட்’ நிறுவனம் இதனை வெளியிட்டுள்ளது.

இந்த நாணயம், இவ்வாரமே புழக்கத்திற்கு விடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“இது பொதுமக்கள் தங்கள் மாற்றத்தில் வரலாற்றின் ஒரு பகுதியைக் கண்டறிய அனுமதிக்கும்” என்று ராயல் மின்ட்டின் ரெபேக்கா மோர்கன் கூறினார்.

இந்த புதிய முடிசூட்டு நாணயம், ஏற்கெனவே டிசெம்பரில் வெளியிடப்பட்ட 50 பென்ஸைப் போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறித்த 50 பென்ஸ் நாணயத்தில் மன்னர் சார்லஸ் முகம் இடது புறம் பார்த்தபடி உருவாக்கப்பட்டுள்ளது.

மறைந்த அவரது தாயார் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்களில் அவரது முகம் வலது புறம் பார்த்தப்படி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.