Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் பிரான்ஸ் ஜனாதிபதியின் இஸ்ரேல் பயணம்: ‘இஸ்ரேலுக்கு பக்கபலம்’

பிரான்ஸ் ஜனாதிபதியின் இஸ்ரேல் பயணம்: ‘இஸ்ரேலுக்கு பக்கபலம்’

0 minutes read

இஸ்ரேலுக்குப் பிரான்ஸ் பக்கபலமாக இருக்கும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவெல் மக்ரோன் உறுதியளித்துள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், இஸ்ரேல் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

நேற்று இஸ்ரேல் சென்றடைந்த மேக்ரான், அந்நாட்டு ஜனாதிபதி ஹெர்சாகை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதையடுத்து, பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவைச் சந்தித்தார். பின்னர் இருவரும் கூட்டாக ஊடகவியலாளர்களை சந்தித்தனர்.

அப்போது பிரான்ஸ் ஜனாதிபதி கூறுகையில், “இஸ்ரேலுக்கும், பிரான்சுக்கும் பயங்கரவாதம் பொது எதிரி. இதில் இஸ்ரேல் தனியாக இல்லை.

“ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக ஒன்றிணைந்தவர்கள் ஹமாசுக்கு எதிராகவும் ஒன்றிணைய வேண்டும். ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் உலக அளவில் ஒன்றிணைந்தது போல, ஹமாசுக்கு எதிரான போரிலும் பிரான்ஸ் ஒன்றிணையும்.

“பாலஸ்தீன பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் இஸ்ரேல் தீர்வு கண்டால் மட்டுமே மத்திய கிழக்குப் பகுதியில் அமைதி, நிலைத்தன்மை ஏற்படும்” என தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More