செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் இங்கிலாந்தில் பணியாற்ற விரும்பும் பல் வைத்தியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

இங்கிலாந்தில் பணியாற்ற விரும்பும் பல் வைத்தியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

0 minutes read

வெளிநாட்டவர்கள், இங்கிலாந்தில் பல் மருத்துவர்களாக பணியாற்றவேண்டும் என்றால் தேர்வு ஒன்றை எழுத வேண்டியிருந்தது.

ஆனால், அத்தேர்வை இரத்து செய்ய அந்நாட்டு அரசு தற்போது தீர்மானித்துள்ளது.

இங்கிலாந்தில் பல் மருத்துவர்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகின்ற நிலையில், அந்நாட்டு மக்கள் தாங்களாகவே பற்களை பிடுங்கி கொண்டுள்ளார்கள் என குறுஞ்செய்திகள் மூலம் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, அந்நாட்டில் காணப்படும் பல் மருத்துவர்களின் தட்டுப்பாடு காரணமாக மேற்படி தேர்வை இரத்து செய்வதற்கு இங்கிலாந்து அரசு திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, இங்கிலாந்தில் வெளிநாட்டவர்கள் பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

மேலும், நல்ல சம்பளம் மற்றும் சில குறிப்பிட்ட இடங்களில் பணி புரிவோருக்கு கொடுப்பனவுகள் என பல வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.