கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யா, நெய்ரி நகரில் ஹில்சைட் எண்டர்சா பாடசாலை விடுதியில் கடந்த 5ஆம் திகதி இரவு தீ விபத்து ஏற்பட்டது
நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்ற மேற்படி பாடசாலை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், 17 மாணவர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.
மேலும், 13 மாணவர்கள் பலத்த தீக்காயம் அடைந்தனர். தீ விபத்தில் படுகாயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மேலும் 4 மாணவர்கள் உயிரிழந்தனர். இதனால் தீ விபத்தில் பலியான மாணவர்கள் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது.