செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் தொழிற்சங்க போராட்டம் காரணமாக கனடா தபால் சேவை முடங்கலாம்!

தொழிற்சங்க போராட்டம் காரணமாக கனடா தபால் சேவை முடங்கலாம்!

0 minutes read

தொழிற்சங்க போராட்டம் காரணமாக கனடாவில் தபால் சேவை முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட சில கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் முன்வைத்திருந்தன.

எனினும், இந்த கோரிக்கைகளை பரிசீலனை செய்த தபால் திணைக்களம், அவற்றை நிராகரித்துள்ளது. நியாயமற்ற கோரிக்கைகளை முன்வைத்ததாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தபால் தொழிற்சங்கங்கள் கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் முன்னெடுத்த போராட்டம் காரணமாக பொதிகள் மற்றும் கடித விநியோகம் ஸ்தம்பிதம் அடைந்திருந்தன.

இந்நிலையில், மீண்டும் தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் குதிக்க திட்டமிட்டுள்ளன. இவ்வாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டால் மீண்டும் தபால் சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, தமது கோரிக்கைகளை தபால் திணைக்களம் உதாசீனம் செய்வதாக தொழிற்சங்க தரப்பிலிருந்து குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதுவரையில் இரு தரப்பினருக்கும் இடையில் இணக்கபாடு ஏற்படுத்திக் கொள்ளப்படவில்லை.

இந்தத் தொழிற்சங்கங்களில் சுமார் 55,000 பணியாளர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.