செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா பாகிஸ்தானுக்கு நிதியுதவி அளிக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி; இந்தியா ஆட்சேபனை

பாகிஸ்தானுக்கு நிதியுதவி அளிக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி; இந்தியா ஆட்சேபனை

1 minutes read

பாகிஸ்தானுக்கு சுமார் 800 மில்லியன் டொலர் நிதியுதவி அளித்ததற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதித்துள்ளது. இதற்கு இந்தியா கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் பொருளாதாரம் ஆபத்தான முறையில் பலவீனமடைந்து வருவதாக இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது. பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரி வருவாய் 2018 ஆம் ஆண்டில் 13 சதவீதமாக இருந்தது. ஆனால், 2023 ஆம் ஆண்டில் அது வெறும் 9.2 சதவீதமாகக் குறைந்துள்ளதாக இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், பாகிஸ்தான் தனது பாதுகாப்பு செலவினங்களை அதிகரித்து வருவதாகவும் இது அந்நாட்டின் பொருளாதார பாதிப்பின் பிரதிபலிப்பாகும் என்றும் இந்தியா சாடியுள்ளது.

இந்நிலையில், சர்வதேச நிதியமைச்சகம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட நிதியை வளர்ச்சித் திட்டங்களுக்குப் பதிலாக, இராணுவத் தேவைகள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் அரசு திருப்பிவிட்டதாக இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.

இதேவேளை, பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் மூலம் ஒரு பில்லியன் டொலர் நிதியுதவி கடந்த மாதம் கிடைத்தது. அப்போதும் இந்தியா தனது ஆட்சேபனை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.