அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் கனடா பொருட்கள் மீதான வரியை 35 சதவீதமாக உயர்த்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டோனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கனடா பிரதமர் மார்க் கார்னிக்கு அmனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே டிரம்ப் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.
‘பென்டானில்’ என்ற வலி நிவாரண மருந்தின் கடத்தலை தடுக்க கனடாவை வலியுறுத்தும் முயற்சியாக இது கருதப்படுகிறது.
ஆனால், அது மட்டுமே கனடாவுடனான சவால் அல்ல என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வரி அதிகரிப்பு, அமெரிக்கா-கனடா இடையிலான விரிசலை மேலும் அதிகரிப்பதாக அமைந்துள்ளது.
தொடர்புடைய செய்தி : இலங்கைக்கு 30 சதவீத வரி விதிப்பை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார்!
அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற டோனால்ட் டிரம்ப், இலங்கை மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பை அறிவித்தார்.
பின்னர் அந்த வரிவிதிப்பை ஜூலை 9ஆம் திகதி வரை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தார். அந்த காலக்கெடு முடிவடைய இருந்தபோது, காலக்கெடுவை ஓகஸ்ட் 1ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.
ஓகஸ்ட் 1ஆம் திகதியில் இருந்து, இலங்கை, ஜப்பான், வங்காளதேசம், மலேசியா உள்பட 14 நாடுகளுக்கு எவ்வளவு வரி விதிக்கப்படும் என்று அந்த நாடுகளுக்கு டிரம்ப் கையெழுத்திட்ட கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
அந்த பட்டியலில் கனடா இடம்பெற்றிருக்கவில்லை. இந்நிலையில், கனடா பிரதமர் மார்க் கார்னிக்கு டிரம்ப் கடிதம் எழுதியுள்ளார்.