செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்!

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்!

0 minutes read

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார். அவருக்கு வயது 87ஆகும்.

பெங்களூர்- மல்லேஸ்வரத்தில் உள்ள வீட்டில் அவர் சுயநினைவின்றி இருந்ததாக இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துள்ளமை உறுதிசெய்யப்பட்டது.

நடிகை சரோஜா தேவி, தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் 200க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

அவர் தனது 17 வயதில் கன்னடத்தில் உருவான “மஹாகவி காளிதாசா எனும் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மபூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை அவர் பெற்றுள்ளார்.

நடிகை சரோஜா தேவி மறைவால் திரையுலகினர் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

அவரது மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.