கனடா – டொரோன்டோ நகரில் தேர் பவனி சென்ற பக்தர்கள் மீது முட்டை வீச்சு தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர் பவனியில் அதிகளவில் இந்தியர்கள் கலந்துகொண்டுள்ளனர். அப்போது மர்ம நபர்கள் சிலர் அவர்கள் மீது முட்டைகளை வீசியுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதில் யாத்திரை சென்ற பக்தர்கள் மீது வீதியின் ஓரத்தில் இருந்த கட்டடங்களில் இருந்து முட்டைகளை வீசுவது தெரிகிறது.
இது இனவெறி தாக்குதல் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஊர்வலத்தில் பங்கேற்ற பக்தர்கள் கூறும்போது, “முட்டைகளை வீசி தாக்குதல் நடத்தும் போது நாம் அதிர்ந்து போய் விட்டோம். தேர் பவனியை நிறுத்த வேண்டும் என்று நோக்கத்தில் இந்தச் செயலை செய்தனர். ஆனால், அவர்களின் எண்ணம் தோல்வியடைந்தது” என்றனர்.