மியான்மரில் 2021ஆம் ஆண்டு தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான அரசாங்கத்தை இராணுவம் கவிழ்த்தது. அதன்பிறகு அங்கு இராணுவ ஆட்சி நடந்து வருகிறது.
இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய உடனே தற்காலிக அதிபராக மியிண்ட் ஸ்வே பொறுப்பேற்றார். பின்னர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தாா்.
தொடர்புடைய செய்தி : மியான்மரில் இராணுவ அவசர நிலை நீக்கம்!
இந்நிலையி்ல், தலைநகர் நேபிடாவில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் நேற்று (07) அதிகாலை அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 74ஆகம்.
மியிண்ட் ஸ்வே மறைவுக்கு இராணுவ ஆட்சித் தலைவர் மின் ஆங் உள்பட அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.