பில்லியன் டொலர் செல்வந்தர்கள் பட்டியில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான் முதன்முறையாக இடம்பிடித்துள்ளார்.
அவருடைய சொத்தின் மொத்த மதிப்பு 1.4 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜுஹி சாவ்லா, ஹ்ரித்திக் ரோஷன், அமிதாப் பச்சன் மற்றும் கரண் ஜோஹர் ஆகிய பாலிவுட் நட்சத்திரங்களும் பில்லியன் டொலர் செல்வந்தர் பட்டியலில் உள்ளனர்.
நடிகர் ஷாருக் கான், திரைப்படங்களில் நடிப்பதைத் தவிர ரெட் சில்லிஸ் (Red Chillies) எனும் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்துகிறார்.
விளம்பரங்கள் மற்றும் சொத்துச் சந்தை முதலீடுகள் ஆகியவற்றின் மூலம் செல்வத்தைக் குவித்துள்ளார். மேலும், அவர் இந்தியாவில் விளையாடும் நைட் ரைடர் கிரிக்கெட் அணியின் உரிமையாளர். இவ்வாறு பல வழிகளில் அவர் பில்லியன் டாலர் செல்வந்தர் ஆனதாக ஆய்வாளர் ஒருவர் BBCயிடம் கூறினார்.
இந்தியாவில் 350க்கும் மேற்பட்ட பில்லியன் டொலர் செல்வந்தர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.