Monday, January 18, 2021

இதையும் படிங்க

மசூதி கட்டும் பணிகள் இம்மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிப்பு!

ராமஜென்பூமி வழக்கில் உச்சநீதிமன்ற அளித்த தீா்ப்பின்படி உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ஒதுக்கப்பட்ட இடத்தில் மசூதி கட்டும் பணிகள் எதிர்வரும் 26 ஆம் திகதி முறைப்படி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிராக்டர் பேரணி திட்டமிட்டபடி நடக்கும்!

டெல்லியில் குடியரசு தினத்தன்று திட்டமிட்டப்படி டிராக்டா் பேரணி நடைபெறும் என்று விவசாயிகள் சங்கங்கள் தெரிவித்துள்ளன. டெல்லி சிங்கு எல்லையில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் கலந்துகொண்ட விவசாயிகள்...

ஐஸ் கிறீமில் கொரோனா வைரஸ் | அதிர்ச்சியில் உலகம்

சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் ஐஸ் கிறீமிலும் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் பெருந்தொகை ஐஸ் கிறீம் அடங்கிய பெட்டிகள் அழிக்கப்பட்டுள்ளன....

நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டம் இன்று!

நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது. கடந்த 13ஆம் திகதி இடம்பெறவிருந்த நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம், சபாநாயகர் மஹிந்த...

சீர்குலைந்த அவுஸ்திரேலிய ஓபன் | 47 வீரர்கள் தனிமைப்படுத்தலில்

அவுஸ்திரேலிய ஒபனில் விளைாயடவுள்ள மொத்தம் 47 வீரர்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்கு தங்களின் ஹோட்டல் அறைகளில் தனிமைப்படுத்தல் நடவடிக்கையை அவசியம் முன்னெடுக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை...

13 வருடங்களின் பின் பாகிஸ்தான் சென்ற தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி

இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக 13 வருடங்களுக்கு பின்னர் தென்னாபிரிக்க அணி பாகிஸ்தான் சென்றுள்ளது.

ஆசிரியர்

`இருட்டில் ஒரு விளக்கு; திறந்தால் துர்நாற்றம்!’ – சென்னை ஐஐடி பேராசிரியரின் 11 ஆண்டு துயரக்கதை

சென்னை கொட்டிவாக்கத்தில் சொந்த வீட்டில் குடியிருந்த ஐஐடி பேராசிரியர், அவரின் மனைவி 
ஆகியோர் கவனிக்க யாரும் இல்லாததால் துயரத்துடன் வாழ்ந்த வாழ்க்கை பரபரப்பாகப் பேசப்படுகிறது.
KALYANI
சென்னை கொட்டிவாக்கம், சுவாமிநாதன் நகர் 4-வது மெயின் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவருபவர் ராஜகோபால் (75). இவர் சென்னை ஐஐடியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரின் மனைவி கல்யாணி (68). இவர்களுக்கு ஒரே ஒரு மகள். அவரும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இதனால் கணவனும் மனைவியும் மட்டுமே அந்த வீட்டில் குடியிருந்தனர்.
KALYANI

இந்தச் சமயத்தில் பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் ராஜகோபாலும் கல்யாணியும் பேசுவதில்லை. முதுமை காரணமாக கல்யாணிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. ஆனால், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் சூழலில் ராஜகோபாலும் இல்லை. இதனால் கடந்த ஓராண்டாக கல்யாணி படுத்தபடுக்கையாகி இருந்தார். அவரின் அருகிலேயே ராஜகோபாலும் இருந்து காலத்தைக் கடத்தினார். எப்போதாவது ராஜகோபாலின் வீடு திறந்திருக்கும். மற்றபடி வீட்டில் ஒரே ஒரு மின்விளக்கைத் தவிர அவர்களின் வாழ்க்கையைப் போல இருட்டாகவே அந்த வீடும் இருந்துள்ளது.

நேற்று அவசர அவசரமாக ராஜகோபால், பக்கத்து வீட்டுக்குச் சென்றார். அவர்களிடம், `என் மனைவி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறாள் எனக்கு உதவி செய்யுங்கள்’ என்று கண்ணீர்மல்க கூறியுள்ளார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் ராஜகோபால் வீட்டுக்குள் முதல் முறையாகச் சென்றனர். அங்கு அவர்கள் கண்ட காட்சிகள் மற்றும் வீட்டிலிருந்து வீசிய துர்நாற்றமும் வேதனையடைய வைத்தது. எலும்பும் தோலுமாகக் காணப்பட்ட கல்யாணியைச் சுற்றி சேலைகள் கிடந்தன.

KALYANI

இதையடுத்து 108 ஆம்புலன்ஸிக்கும் நீலாங்கரை காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். போலீஸாரும் ஆம்புலன்ஸ் ஊழியர்களும் சம்பவ இடத்துக்கு வந்தனர். ஆனால், அவர்களுக்கு ராஜகோபால் போதிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இதனால் 108 ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸார் திரும்பிச் சென்றுவிட்டனர். இந்தச் சமயத்தில்தான் 108 ஆம்புலன்ஸ் ஊழியர் ஒருவர், உறவுகள் என்ற அறக்கட்டளையின் நிறுவனர் காலித் அகமதுவுக்கு தகவல் தெரிவித்தார்.

காலித் அகமது மற்றும் உறவுகள் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் நேற்றிரவு ராஜகோபால் வீட்டுக்குச் சென்றனர். நீண்டநேரம் ராஜகோபாலிடம் பேசிய உறவுகள் அறக்கட்டளையினர் கல்யாணியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சம்மதம் பெற்றனர். அதன்பிறகு ஆம்புலன்ஸ் மூலம் கல்யாணியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது கல்யாணியின் உடலில் இடதுபுறம் முழுவதும் அழுகிய நிலையில் புழுக்கள் இருந்தன. அதிலிருந்து துர்நாற்றம் வீசியது.

KALYANI

மருத்துவமனையில் கல்யாணி இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து கல்யாணியின் சடலத்தை கைப்பற்றிய போலீஸார், பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிரேத பரிசோதனைக்குப்பிறகு கல்யாணியின் சடலம் ராஜகோபாலிடம் ஒப்படைக்கப்பட்டது. உறவுகள் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்களே ராஜகோபாலுக்கு உடன்இருந்து கல்யாணியின் சடலத்தை தகனம் செய்ய உதவினர்.

இதுகுறித்து ராஜகோபாலின் வீட்டின் அருகில் உள்ளவர்களிடம் விசாரித்தபோது, “ராஜகோபால் மற்றும் கல்யாணி ஆகியோர் இந்த வீட்டுக்கு 11 ஆண்டுகளுக்கு முன் குடிவந்தனர். ஆனால் யாரிடமும் பேச மாட்டார்கள். நாங்கள் அவர்களைப் பார்த்து சிரித்தால் கண்டுகொள்ள மாட்டார்கள். உறவினர்கள் என யாரும் வரமாட்டார்கள். கடந்த ஓராண்டாக ராஜகோபால் மட்டும் வெளியில் வருவார். பொருள்களை வாங்கிக் கொண்டு வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக் கொள்வார். ராஜகோபாலின் வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசும். ஆனால் அதைக்கூட அவர்களிடம் சொல்ல முடியவில்லை. ஜன்னல்களும் கதவுகளும் எப்போதும் பூட்டியே இருக்கும்.

KALYANI

11 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்றுதான் அவர் எங்களிடம் மனைவி உடல் நலம் சரியில்லாமல் உயிருக்குப் போராடுவதாகக் கூறி உதவி கேட்டார். உடனே நாங்கள் வீட்டுக்குள் சென்றோம். அப்போது படுத்த படுக்கையாக கல்யாணி இருந்தார். அவரைச் சுற்றி மலம், சிறுநீர் தேங்கியிருந்தது. மேலும், ஒரே இடத்தில் படுத்திருந்ததால் அவரின் உடலில் சில பாகங்கள் அழுகி காணப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில் அந்த வீட்டில் ராஜகோபால் எப்படி வசித்தார் என்று தெரியவில்லை. அதுகுறித்து அவரிடம் கேட்டாலும் ராஜகோபாலிடமிருந்து சரியான பதில் இல்லை” என்றனர் வேதனையுடன்.

முதுமைகாலத்தில் கவனிக்க யாரும் இல்லாத இந்தத் தம்பதி, இப்படியொரு வேதனை நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்துள்ளனர்.

நன்றி: விகடன்

இதையும் படிங்க

சூடானில் பழங்குடியினர் இடையே மோதலில் 83 பேர் பலி!

சூடான் நாட்டில் பழங்குடியினர் இடையே இடம்பெற்ற மோதலில் 83 பேர் உயிரிழந்துள்ளனர். சூடானின் தார்பூர் நகரில் ஐ.நா. சபை மற்றும்...

இந்தோனேசியாவில் வெடித்தது எரிமலை

இந்தோனேசியாவில் செமெரு என்ற எரிமலை வெடிக்க தொடங்கி சாம்பல் புகையை வெளியேற்றி வருகிறது. இந்தோனேசியாவில் நிலநடுக்கங்கள், சுனாமி மற்றும் எரிமலை...

முதல் போட்டியில் 7 விக்கெட்டுகளால் இங்கிலாந்து வெற்றி

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம்...

கொரோனாவை சமாளிப்பது இந்த ஆண்டு மேலும் சிரமமாகலாம்!

கொரோனா வைரஸ் பரவலைச் சமாளிப்பது, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் இன்னும் சிரமமாக இருக்கக்கூடும் என்று, உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் கொரோனா தடுப்பூசியின் பாவனை குறித்த அறிவிப்பு வெளியானது!

கொரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்தும் பணி பெப்ரவரி இறுதி வாரத்தில் அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் அரசாங்கம் தொடங்கும் என கொரோனா தடுப்பூசி திட்டம் மற்றும் தேசிய அபிவிருத்தி தொடர்பிலான...

அமெரிக்காவின் புதிய அதிபராகும் பிடென் ஆட்சி நிர்வாகத்தில் 20 இந்திய வம்சாவளியினர்!

வாஷிங்டன்: அமெரிக்காவில் அமையும் பிடென் அரசில், 20 இந்திய வம்சாவளியினருக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பிடென் நாளை மறுதினம் பதவியேற்க உள்ளார். அவருடைய புதிய...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

சீர்குலைந்த அவுஸ்திரேலிய ஓபன் | 47 வீரர்கள் தனிமைப்படுத்தலில்

அவுஸ்திரேலிய ஒபனில் விளைாயடவுள்ள மொத்தம் 47 வீரர்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்கு தங்களின் ஹோட்டல் அறைகளில் தனிமைப்படுத்தல் நடவடிக்கையை அவசியம் முன்னெடுக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை...

13 வருடங்களின் பின் பாகிஸ்தான் சென்ற தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி

இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக 13 வருடங்களுக்கு பின்னர் தென்னாபிரிக்க அணி பாகிஸ்தான் சென்றுள்ளது.

விருந்துபசார நிகழ்வில் கலந்துகொண்ட 54 பேர் கைது

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி விருந்துபசார நிகழ்வில் கலந்துகொண்ட குற்றச்சாட்டில் பொலன்னறுவை, மெதிரிகிரிய பகுதியில் 54 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 13 பெண்களும்...

மேலும் பதிவுகள்

வணக்கம் லண்டன் வாசகர்களுக்கு இனிய தைத்திருநாள் வாழ்த்துகள்!

உலகமெங்கும் தைத்திருநாளைக் கொண்டாடுகின்ற உழவப் பெருமக்களுக்கு உலகத் தமிழ் மக்களுக்கு வணக்கம் லண்டன் தனது வாழ்த்துளை தெரிவித்துக்கொள்ளுகிறது.

நயன்தாரா வேடத்திற்கு மாறிய பிரபலம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவின் வேடத்திற்கு பிரபல ஹிந்தி நடிகை மாறியுள்ளார். நெல்சன் இயக்கத்தில் கடந்த...

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அமெரிக்க வீரங்கனை தடையை தகர்ப்பாரா?

ஒலிம்பிக்கில் 100 மீற்றர் தடகள ஓட்டபந் பந்தயத்தில் சம்பியன் பட்டம் வென்ற பிரையன்னா மெக்னீல் தடகளப் போட்டிகளிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் பெண்ணொருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

அமெரிக்காவின் கன்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஏழு தசாப்தங்களில் முதல் முறையாக அமெரிக்க அரசாங்கம் பெண் கைதியொருவருக்கு மரண...

இந்தோனேசியாவில் வெடித்தது எரிமலை

இந்தோனேசியாவில் செமெரு என்ற எரிமலை வெடிக்க தொடங்கி சாம்பல் புகையை வெளியேற்றி வருகிறது. இந்தோனேசியாவில் நிலநடுக்கங்கள், சுனாமி மற்றும் எரிமலை...

பிந்திய செய்திகள்

98 வயதில் கொரோனாவை வென்ற இந்த நடிகரை தெரியுமா?

98 வயதில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட கமல் பட நடிகர் தற்போது அதில் இருந்து மீண்டு வந்திருக்கிறார். கமல் நடித்த 'பம்மல்...

துயர் பகிர்வு