ராஜஸ்தான் மாநிலம்- சிட்டோர்கர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.
நேற்று (சனிக்கிழமை) நள்ளிரவு, உதய்பூர் – நிம்பஹாரே நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த ஜீப் ஒன்றும் எதிரே வந்த டிரக் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்தனர். ஏனையோர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில், 6பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை குறித்த விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.