மக்கள் அதிகம் பயன்படுத்தும் மேம்பாலம் இடிந்து விழுந்தது

இந்தியாவின் மகாராஷ்டிராவில் உள்ள புகையிரத நிலைய நடைபாதை மேம்பாலம் இடிந்து விழுந்து 13 பேர் காயமடைந்து உள்ளனர் .

இந்த சம்பவம் மகாராஷ்டிராவின் சந்தர்போர் பால்லர்ஸ் புகையிரத நிலையத்தில் பதிவாகியுள்ளது .

மேம்பாலம் இன்று மாலை 5 மணியளவில் இடிந்து விழுந்துள்ளது இதன் உயரம் 60 அடி ஆகவும் அதிகம் மக்கள் நடமாடும் இடமாகவும் உள்ளது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவருக்கு அரசு நிதிஉதவி ஒன்றை அறிவித்துள்ளது படுகாயம் அடைந்தவருக்கு இந்திய ரூபாயில் 1 லட்சமும் காயம் அடைந்தவருக்கு 50 ஆயிரமும் வழங்கப்பட்ட உள்ளது .

ஆசிரியர்