செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் இளவரசர் ஹாரியின் திடீர் முடிவு!

இளவரசர் ஹாரியின் திடீர் முடிவு!

1 minutes read

அரசக் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற நிலையில் இருந்து விலகுவதாக இங்கிலாந்து  இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகியோர்அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீண்ட ஆலோசைனைக்கு பிறகு இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் பொருளாதார ரீதியில் தாங்கள் சுயமாக செயல்பட திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

அரசக் குடும்பத்தினருடன் சில கருத்து வேறுபாடு உள்ளது என்று ஊடகங்களில் அவர்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில் இந்த திடீர் முடிவு அரண்மனை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதே சமயம் இங்கிலாந்து ராணிக்கான தங்கள் ஆதரவை தொடர்ந்து அளிப்போம் என்றும் கூறியுள்ள ஹாரி தம்பதியினர், தங்கள் மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இங்கிலாந்து மற்றும் வட அமெரிக்காவில் வசிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்தப் புவியியல் சமநிலை எங்கள் மகனை, அவர் பிறந்த அரச பாரம்பரியத்தை பற்றிய புரிதலுடன் வளர்க்க எங்களுக்கு உதவும். அதேநேரம் ராணி, காமன்வெல்த் மற்றும் எங்களது ஆதரவாளர்களுக்காக வேலை செய்ய கடமைப்பட்டுள்ளோம். நிறைய விவாதித்து தான் இந்த முடிவை அறிவித்து இருக்கிறோம்.

எங்களுக்கு ஆட்சி செய்வதில் விருப்பம் இல்லை. இதுவரை எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றிகள் என குறிப்பிட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.