1
பொதுநலவாய மாநாடு நாளை லண்டன் நகரில் ஆரம்பமாகவுள்ளது.
நாளை ஆரம்பமாகும் குறித்த மாநாடு எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் நடைப்பெறவுள்ளது.
இந்தநிலையில், அதில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மதியம் பிரித்தானியா நோக்கி பயணமானார்.
இந்த மாநாட்டில் 53 நாடுகளின் தலைவர்கள் பங்குகொள்ளவுள்ளனர்.
இந்த மாநாட்டின்போது, ஜனாதிபதி பிரித்தானிய பிரதமர் தெரேசா மே உள்ளிட்ட அரச தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
