செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா நிபந்தனைகள் அடிப்படையில் இலங்கைக்கு உதவி வழங்க அமெரிக்கா முடிவு!

நிபந்தனைகள் அடிப்படையில் இலங்கைக்கு உதவி வழங்க அமெரிக்கா முடிவு!

1 minutes read

அமெரிக்காவினால் இந்த ஆண்டு முழுவதும் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள நிதி உதவிகளுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

1.3 ட்ரில்லியன் டொலர்கள் பெறுமதியான அனைத்து செலவின சட்ட மூலத்தை அமெரிக்க காங்கிரஸ் கடந்த மாதம் அங்கீகரித்திருப்பதுடன், அதில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கைச்சாத்திட்டுள்ளார்.

யுத்தம் மற்றும் வன்முறைகள் இடம்பெற்ற பிரதேசங்களின் ஜனநாயக அபிவிருத்தி மற்றும் காணாமல் போனோரது உறவினர்களுக்கு நீதிவழங்கும் நடவடிக்கைகளுக்கான வேலைத்திட்டங்களுக்காக 35 மில்லியன் டொலர்கள் வழங்கப்படவுள்ளன.

பாதுகாப்பு தரப்பிற்கான ஒதுக்கம் 5 லட்சம் டொலர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பகுப்பாய்வு சோதனை உதவியாக 8 மில்லியன் டொலர்களும், மதச்சுதந்திர வேலைத்திட்டங்களுக்காக 25 மில்லியன் டொலர்களும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிதி உதவிகளுக்கு பதிலாக, அமெரிக்காவினால் முக்கியமான நிபந்தனைகள் பல விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி நீதிவழங்கும் பொறிமுறையை அமுலாக்குதல், வடக்கு கிழக்கில் இராணுவக்குறைப்பை மேற்கொள்ளுதல், தண்டனை வழங்கப்படாத நிலைமையை கலைதல், அமைதிக்காக்கும் படையில் இணைக்கப்பட்ட இலங்கை இராணுவத்தினர் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தல் போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதன்நிமித்தம் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் 2015ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் பரிந்துரைகள் அமுலாக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காங்கிரஸினால் அங்கீகரிக்கப்பட்ட சட்டமூலத்தில் இந்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.