செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தேர்தல் வரட்டும் அப்போது பார்ப்போம் முதலமைச்சர் சீ.வி!

தேர்தல் வரட்டும் அப்போது பார்ப்போம் முதலமைச்சர் சீ.வி!

1 minutes read

 

யாழ்ப்பாணம் கைதடியில் உள்ள வடக்கு மாகாண பேரவை செயலகத்தில் குடாநாட்டில் ஏற்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக பொலிஸாருடன் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

இக் கலந்துரையாடலையடுத்து இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் செய்தியாளர்களால், நீங்கள் தம்முடன் கூட்டு சேர்ந்து அடுத்த மாகாண சபை தேர்தலில் போட்டியிட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னனி கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இதற்கு பதில் என்ன கூறுகின்றீர்கள் என வினவிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்,

வடமாகாணசபை தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு பலரும் கேட்கிறார்கள் ஆனால் மாகாணசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. ஆகவே எவருடன் சேருவது என்பதை தேர்தல் காலத்திலேயே தீர்மானிப்பேன் இப்போது அது தேவையில்லை. என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் கூறியுள்ளார்.

என்னை பலரும் அடுத்த மாகாண சபை தேர்தலில் போட்டியிட தம்மோடு வருமாறு அழைக்கின்றார்கள். ஆனால் இது தொடர்பாக நான் அந்த நேரத்திலேயே முடிவெடுப்பேன். அத்துடன் தற்போது அடுத்த மாகாண சபை தேர்தலை எப்போது நடத்துவது என முடிவில்லாத நிலையில் அதற்கு இன்னமும் ஆறு ஏழு மாதம் தாமதமாகலாம்.

எனவே இது தொடர்பாக சிந்திப்பதற்காக நீண்ட காலம் இருக்கிறது. இந்நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியுடன் நான் கூட்டு வைப்பதா இல்லையா என்பது தொடர்பாக சிந்திப்பேன் என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.