செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா சண்டிலிப்பாய் சண்முகம் | சிறுகதை | பொன் குலேந்திரன்

சண்டிலிப்பாய் சண்முகம் | சிறுகதை | பொன் குலேந்திரன்

4 minutes read

இலச்சை கெட்ட மரம் என்றழைக்கப்படும் சண்டிக் கீரை மரம், பெரிய இலைகளைக் கொண்ட ஒரு அரிய வகை மரமாகும். இதன் மருத்துவ பயங்களுக்காகவும், அழகுக்காகவும் வளர்க்கப்படுகிறது. அதிக உயரமாக வளராமல் சற்று வளைந்து வளரும் தன்மை கொண்ட இந்த மரங்களின் இலைகள் அகலமாக, காணப்படும்.. அரிதாகப் பூக்கும் சண்டிக் கீரை. ஒரு காலத்தில் நிறைந்த ஊராக இருந்த படியால்,

சண்டிலிபாய் என்ற ஊரின் பெயர் வந்திருக்கலாம்.

இது யாழ்ப்பாணக் குடா நாட்டில்   உள்ள ஒரே ஒரு பருவகால ஆறு  வழுக்கை ஆறாகும். இந்த ஆறு தெல்லிப்பளையில் உருவாகிறது. இது தெல்லிப்பளையிலிருந்து தென் மேற்காக கந்தரோடை, சண்டிலிப்பாய், வட்டுக்கோட்டை ஆகிய இடங்களைக் கடந்து கடலில் கலக்கிறது. இதன் நீளம் 16 கி மீ இந்த வாய்க்கால்  நன்னீர் விவசாயத்துக்கு பெரிதும் உதவிகிறது.

இந்த வாய்க்கால்  நன்னீரைப் பயன் படுத்தி தன் மூன்று ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்தவர் பாலன்.  சண்டிலிப்பாய்  சண்முகத்தின் தந்தை  எனக்கும் சண்முகத்துக்கும் என்ன தொடர்பு என்று கேட்பீர்கள். அவன் என் அம்மாவின் பெரியம்மா வசுமதியின் ஒரே மகன்  சண்முகம். அவனின் தந்தை பாலன் கோபக்காரன். எப்போது கோபம் வரும் போகும் என்பது தெரியாது.   காணி தகராரில் ஒருவரைக் கொலை செய்ததற்காக ஆயுள்  சிறை தண்டனை  பெற்று சிறையில்  வாடுபவர். தண்டனைக்கு  எதிராக  அப்பீல் செய்ய  போதிய பணம் பாலனுக்கு இருக்கவில்லை.  சண்முகம் பாலனின்  ஒரே மகன். பாலனின் மனைவி வசந்தி ஒரு பயிற்சி பெற்ற  ஆசிரியை. அமைதியானவள். அவள் பாலனின் சொந்த தாய்  மாமன் மகள். திருணமாகி மூன்று வருடத்தில் சண்முகம் பிறந்தான். அதன் பின் பாலன் தம்பதிகளுக்கு பிள்ளைகள்  இல்லை.

பாலனுக்கு திடீர் எனக் கோபம் வரும் காணி தகராரில் அரசியல்வாதி ஒருவரைக்  கோடாலியால் அடித்து கொலை  செய்து விட்டான். போலீஸ் கேஸ் பதிவு செய்தது வழக்கு நடந்தது. தற்பாதுகாப்புக்குக் கொலை செய்தேன் என்ற வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம் இறந்தவருக்கும் பாலனுக்கும் நீண்ட காலம் காணித் தகராறு இருந்தது. அதனால் ஆயுள் தண்டனை அவனுக்குக்கிடைத்தது.

 

*****

வசுமதி மகனோடு தனித்துப் போனாள். என் அம்மாவைத் தவிர உறவினர்கள் அவளை ஒதுக்கி வைத்தனர்.   வசுமதி என் அம்மாவின்  பெரியம்மா மகள். சொல்லப் போனால் சண்முகம், எனக்கு அண்ணன் முறை.. அவன் என்னிலும் ஒரு வருடம் மூப்பு ஆனால் என்  வகுப்பில் படித்தான். அவன் கொலைகாரன் மகன் என்பதால் பல மாணவர்கள் அவனோடு நண்பர்களாக இருக்கப்  பயந்தனர். ஆசிரியர்கள் கூட அவனை  வேறு படுத்தி நடத்தினார்கள். அதனால் சண்முகத்துக்கு மனதுக்குள் தாழ்வு மனப் பான்மை உருவாகியது. அவனோடு நெருங்கிப் பழகியவன் நான் மட்டுமே.

ஒரு நாள் கன்னத்தில்  கை வைத்தபடியே  கவலையோடு இருந்த சண்முகத்தைப்  பார்த்து நான் கேட்டேன் “என்ன சண்முகம் அண்ணா ஏன் இப்படி யோசித்துக் கொண்டு இருக்கிறீர்?”

“தம்பி நான் எதைச் சொல்ல. என் அப்பா எதிர்பாராத விதமாகச் செய்த குற்றத்துக்கு அவர் ஜெயிலுக்கு  போயிட்டார். அதனால் என்னுடன் படிக்கும் மாணவர்கள் என்னிடம்  இருந்து   ஒதுக்கி நடக்குறார்ககள் என்னுடன் பேச தயங்குகிறார்கள்” சண்முகம் கவலையோடு சொன்னான்.

“அண்ணா இந்த சமூகம் பணம் உள்ளவன், அரசியல் வாதி, அதிகாரம் உள்ளவன் குற்றம் செய்தால் ஊடகங்கள் எதை  எழுதினானாலும் அதை சமூகம் பெரிதாக  எடுப்பதில்லை. உங்கள் அப்பாவின்  குடும்பம் அரசியல் தொடர்பு இல்லாத சாதாரண  குடும்பம். அதனால் சமூகம் உங்களை ஒதுக்கிவைக்கிறது காரணம் அதுக்கு உங்கள் குடும்பத்தால் பயன் ஏதும் இல்லை”

“இதுக்கு ஒரு தீர்வு இல்லையா தம்பி”

“ஏன் இல்லை. மனம் உண்டானால் இடம் உண்டு. உங்களில்  நம்பிக்கை வையுங்கள் . கோபத்தை தணியுங்கள்.. உங்களிடம் பலம் இருக்கிறது. பேசும், எழுதும் திறமை இருக்கிறது. சிந்தித்து  உங்கள் அறிவைப் பாவித்து சமூகம் எதை விரும்புகிறதோ  அதை செயலில் செய்து காட்டுங்கள்.   உங்களுக்கு வெற்றி நிச்சயம் கிட்டும்” நான் அவனுக்குப் பல வருடங்களுக்கு முன் சொன்னதை அவன் செயல் படுத்தி காட்டியதை என்னால் நம்ப முடியவில்லை   நான் ஊரில் இருந்து கனடா போனதால் சண்முகத்தோடு எனக்குத் தொடர்பு பல வருடங்கள்  இருக்கவில்லை. கனடாவிலிருந்து ஊருக்கு லீவில் வந்த போது ஊரில்  நடந்த பிர்மாணடமான அரசியல் கூட்டதில் பலர் சண்முகத்தைப் பாராட்டி பேசியதை கண்டேன். என்னால் அதை நம்பமுடியவில்லை.  பத்து   வருடங்களுக்குள்   அவனிடம் என்ன  மாற்றம்.

நான் அவனைத் தெரியாதவன் போல் என் பக்கத்தில் நின்ற ஒரு முதியவரிடம் கேட்டேன்

“அய்யா இவ்வளவு அழகாகத்  தமிழிலும்  சிங்களத்திலும் ஆங்கிலத்திலும்  பேசுபவர் யார்?”

“இவர் யார் என்று தெரியாதா உமக்குத் தம்பி?  இவர் இந்த கிராமத்துக்குப் பெருமை தேடித் தந்தவர். இவர் தான் கிராமஅபிவிரித்துக்கும் இன ஒற்றுமைக்கு நியமிக்கப் பட்ட புதிய இராஜாங்க அமைச்சர். ஆளும் கட்சியின் ஆதரவாளர். கொழும்புக்கு சென்று ஒரு சிங்கள அரசியல்வாதியின்  வீட்டில் டிரைவராக இருந்தவர் . இவரின் பேசும் திறமையை கண்ட அரசியல்வாதி  இவரை மேடைகளில்  பேச பயன்படுத்திக் கொண்டார் .இவரின் பேச்சைக்  கேட்க அதிக கூட்டம் வரும்.   சிங்கள அரசியல்வாதியின்   உதவியால் அவருக்கு இராஜாங்க அமைச்சர் பதவி இவருக்கு கிடைத்தது. எங்கள் கிராமத்துக்கு   பெருமை தேடித்தந்தார் . வழுக்கை ஆற்றை பெருப்பித்து ஊர் விவசாயிகளுக்கு :உதவ போறாராம்.  எங்கள் ஊர்  டிஸ்பென்சரியை  விஸ்தீரிக்க போறாராம்.

“அப்ப இந்த ஊரிலிருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து இறுதிப் போரில் சரணாகதி அடைந்து சிறையில் வாடும் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய ஏதும் செய்வாரா “

“அதைப் பற்றி பேச வேண்டாமாம்”

என் மனதுக்குள் சிரித்துக்  கொண்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன்

 

***

சண்முகத்தின் பேச்சை கூட்டத்தில்  கேட்டு ஒருகிழமைக்குப்   பின் என் அம்மா என்னிடம் சொன்னாள்

”மகன் உனக்குச் செய்தி தெரியுமா”

“நீ சொன்னால் தானே அம்மா தெரியும்”

எங்கடை சண்முகத்தின்  அப்பா பாலனுக்கு சிறையில் நல் நடத்தை நிமித்தம் ஜனாதிபதி அவரை மன்னித்து  விடுதலை செய்து  விட்டாராம்”

“யார் அம்மா இந்த செய்தி உனக்குச் சொன்னது “

“வேறு யார் எங்கள் வசுமதி தான். பாவம் அவள் பல வருடங்கள் கணவனைப் பிரிந்து வாழ்ந்தவள் “

“சண்முகம் வாழக் கற்றுக் கொண்டான் அம்மா “ என்றேன் நான்

 

(யாவும் புனைவு)

 

– பொன் குலேந்திரன் (கனடா)

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.