Saturday, May 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் மோகனுக்கு விளக்கமறியல் நீடிப்பு

மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் மோகனுக்கு விளக்கமறியல் நீடிப்பு

1 minutes read

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகனை எதிர்வரும் 23 ஆம் திகதிவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் கருப்பையா ஜீவராணி இன்று புதன்கிழமை (09) காணொளி மூலம் உத்தரவிட்டார்.

இணையத்தளங்களில் தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் படங்களை பதிவேற்றியமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கடந்த வருட மே மாதம் 3 ஆம் திகதி  தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகனை ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அழைக்கபபட்ட நிலையில் பொலிஸ் நிலையத்தில் வைத்து ஏறாவூர் பொலிசார் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் அவரை கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவரை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் கருப்பையா ஜீவராணி முன்னிலையில்  இன்று வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது  கொரோனா காரணமாக நீதிமன்றத்துக்கு அழைத்துவரமுடியத காரணத்தினால் காணொளி மூலம் அவரை தொடர்ந்து எதிர்வரும் பெப்ரவரி 23ஆம்  திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.  

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More